என் மலர்

  நீங்கள் தேடியது "Danish Kaneria"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆஸ்திரேலியாவில் சிறப்பான சாதனைகளை செய்துள்ளதால் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்து வருகிறது.

  அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் காயத்தால் விலகியிருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் மீண்டும் திரும்பியுள்ளனர். ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியுள்ளார்.

  இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களில் சுமாரான பார்மில் இருக்கும் ரிஷப் பண்ட்டை மீண்டும் மீண்டும் தேர்வு செய்து தேர்வுக்குழு அதே தவறை செய்து வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் தினேஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

  இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் அவர் கூறியதாவது:-

  இந்தியா செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கிறது. ஆஸ்திரேலியாவில் சிறப்பான சாதனைகளை செய்துள்ளதால் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அவருடைய பார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லை.

  இவருக்கு பதிலாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக விளையாட காத்துக்கிடக்கும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்து வருகிறது.

  மேலும் அவர்கள் தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கவில்லை எனில் அவரை தேர்வு செய்ததில் எந்த பயனுமில்லை. அதற்கு பதிலாக கூடுதல் பந்து வீச்சாளரை சேர்த்திருக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரோகித் சர்மா தொடக்க வீரராகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
  • கேஎல் ராகுல் கீழ் வரிசையில் ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர் விருப்பம்.

  ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தொடங்கவுள்ளது. இந்த ஆசிய கோப்பை போட்டி இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் ஆகிய அணிகளுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்த தொடர் முக்கியமானதாக இருக்கும்.

  இந்திய கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் ஆகஸ்ட் 28-ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குரூப் ஏ போட்டியில் மோதுகின்றன. கடைசியாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 2021 டி20 உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தார், ஆனால் தற்போது ரோகித் சர்மா தலைமை வகிக்கிறார்.

  ரோகித் சர்மா தொடக்க வீரராகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பிய கேஎல் ராகுல் அவருடன் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ள நிலையில் ரோகித் சர்மாவுடன் சூர்ய குமார் யாதவ் விளையாடலாம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தினேஷ் கனேரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் கூறியதாவது:-


  ரோகித் சர்மாவுடன், சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராக தொடர விரும்புகிறேன். தொடக்க ஆட்டக்காரராக ரோகித்துடன் நிலைத்து நின்று சிறப்பாக ஆடுகிறார்.

  கேஎல் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அவர் கீழ் வரிசையில் ஆட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் வெவ்வேறு சூழ்நிலைகளில் பேட்டிங் செய்துள்ளார் மற்றும் அவர் எல்லா சூழ்நிலைகளிலும் ரன்களை குவித்துள்ளார்.

  எனவே, கேஎல் ராகுலுக்கு பதிலாக சூர்ய குமார் யாதவ் ரோகித்துடன் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினால் அணிக்கு பலம் சேர்க்கும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி சராசரியை விட குறைவாக உள்ளது.
  • ஒரு விக்கெட் கீப்பராக பண்ட் தனது உடல் தகுதியை அதிகரிக்க வேண்டும்.

  இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. கீப்பிங்கில் சரியாக செயல்படுவதில்லை. பேட்டிங்கில் அவரது சாட் தேர்வு தவறாக உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங் கவலை அளிக்கும் விதத்தில் இருந்தது. இவரையடுத்து ரோகித் சர்மாவும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை.

  இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ரோகித் சர்மா உடல்தகுதி குறித்து விமர்சித்துள்ளார்.

  இது குறித்து டேனிஷ் கனேரியா கூறியதாவது:-

  டேனிஷ் கனேரியா

  டேனிஷ் கனேரியா

   ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி சராசரியை விட குறைவாக உள்ளது. இது என்னோட கருத்து. கோலி கேப்டனாக பொறுப்பேற்றதும், அணியின் உடற்தகுதி தேவைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. ஆனால் மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் போது ரிஷப் பண்ட் பின்தங்கியே உள்ளார்.

  ரோகித் ஷர்மா பெரிய அளவில் பார்மில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு பேட்ஸ்மேன் என்பதால் அவருக்குப் பரவாயில்லை. இருப்பினும், ஒரு விக்கெட் கீப்பராக பண்ட் தனது உடல் தகுதியை அதிகரிக்க வேண்டும்.

  இளம் வீரரான ரிஷப் பண்ட் சமீபகால ஆட்டங்களில் சரியாக குனிந்து நிமிர முடியவில்லை என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவரது உடல் எடை பிரச்சினையே இதற்கு காரணமாகும். மன உறுதியையும் முதிர்ச்சியையும் வளர்ப்பதற்கான ஒரே வழி உடற்தகுதியாகும்.

  இவ்வாறு டேனிஷ் கனேரியா கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானில் சூதாட்ட புகாரில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா தான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். #DanishKaneria #Pakistan
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முன்னணி வீரராக திகழ்ந்து வந்தார்.

  இந்த நிலையில், இங்கிலாந்து உள்நாட்டு அணியான எஸ்ஸெக்ஸ் அணிக்கு விளையாடியபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது புகார் சுமத்தப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. இதனால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இத்தனை ஆண்டுகள் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கூறிவந்த டேனிஷ் தற்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

  இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இத்தனை நாட்கள் தனது தந்தைக்காகவே இந்த உண்மையை மறைத்து வந்ததாகவும், பொய்களுடன் நீண்ட நாட்கள் வாழ வலிமை இல்லாததால் தற்போது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #DanishKaneria #Pakistan
  ×