search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லிவர்பூல் கால்பந்து அணி வீரர்கள்
    X
    லிவர்பூல் கால்பந்து அணி வீரர்கள்

    யூரோ சாம்பியன்ஸ் லீக்: முதல்பாதி நேரத்தில் 3-0, பின்னர் த்ரில் வெற்றி பெற்றது லிவர்பூல்

    யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் ஆஸ்திரேலியாவின் சால்ஸ்பர்க் அணிக்கெதிரான முதல் பாதி நேர ஆட்டத்தில் 3-0 முன்னிலைப் பெற்றபின், த்ரில் வெற்றி பெற்றது லிவர்பூல்.
    யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று பல்வேறு ஆட்டங்கள் நடைபெற்றன. நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில்  லிவர்பூல் - ரெட் புல் சால்ஸ்பர்க் (ஆஸ்திரியா) அணிகள் மோதின. இந்த ஆட்டம் லிவர்பூல் அணிக்கு சொந்தமான அன்பீல்டு மைதானத்தில் நடைபெற்றது.

    2017-ல் இருந்து லிவர்பூல் அன்பீல்டு மைதானத்தில் தோல்வியடந்தது கிடையாது. இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் களம் இறங்கியது. சொந்த ரசிகர்களுக்கு மத்தியில் லிவர்பூல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் சாடியோ மானேவும், 25-வது நிமிடத்தில் ஆண்ட்ரூ ராபர்ட்சனும், 36-வது நிமிடத்தில் முகமது சாலாவும் கோல் அடித்தனர். ஆட்டத்தின் 36-வது நிமிடம் வரை லிவர்பூல் 3-0 என முன்னிலை பெற்றிருந்தது.

    அதன்பின் ரெட் புல் அணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 39-வது நிமிடத்தில் அந்த அணியின் ஹீ-சான் கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் லிவர்பூல் 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    கோல் அடித்த மகிழ்ச்சியில் ரெட் புல் அணி வீரர்

    2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் 56-வது மற்றும் 60-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து ஸ்கோரை 3-3 என சமன் செய்தது ரெட் புல்.

    இதனால் லிவர் பூல் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் முகமது சாலா 69-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் லிவர்பூல் 4-3 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. தப்பி பிழைத்தது போல் லிவர்பூல் 4-3 என த்ரில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×