என் மலர்
நீங்கள் தேடியது "Manish Pandey"
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியில் மனிஷ் பாண்டே இடம் பெற்றிருந்தார்.
- நேற்றைய போட்டியில் மனிஷ் பாண்டே 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியில் இடம் பிடித்து 19 ரன்கள் எடுத்த மனிஷ் பாண்டே ஐபிஎல் வரலாற்றில் மகத்தான சாதனையை படைத்துள்ளார்.
அதன்படி 2008-ம் ஆண்டில் உதயமான ஐ.பி.எல்.-ல் இதுவரை நடந்துள்ள அனைத்து தொடர்களிலும் ஆடிய தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருடன் சாதனை பட்டியலில் மனிஷ் பாண்டேவும் இணைந்துள்ளார்.
அவர் 2008-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.






