search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ஜோடி
    X
    இந்திய ஜோடி

    பேட்மிண்டன்: இரண்டு வெற்றிகள் பெற்றும் காலிறுதி வாய்ப்பை இழந்த இந்திய ஆண்கள் ஜோடி

    கடைசி லீக்கில் இங்கிலாந்தை சேர்ந்த பெண் லேன்- சீன் வேண்டி ஜோடியை இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்- சிராக் ஷெட்டி 2-0 என வீழ்த்தினாலும் பாயிண்ட் வித்தியாசத்தில் காலிறுதி வாய்ப்பை இழந்தது.
    பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆண்கள் ஜோடியான சிராக் ஷெட்டி- சாத்விக்சாய்ராஜ் ஜோடி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்தது. இதே பிரிவில் இந்தோனோசியா, சீன தைஃபே, கிரேட் பிரிட்டன் ஜோடிகளும் இடம் பிடித்திருந்தன. ஒவ்வொரு ஜோடியும் மற்ற ஜோடியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் ஜோடி காலிறுதிக்கு முன்னேறும்.

    இந்திய ஜோடி முதல் ஆட்டத்தில் சீன தைஃபே ஜோடியை எளிதாக வென்றது. ஆனால் இந்தோனேசியாவுக்கு எதிராக படுதோல்வியடைந்தது. இன்று கிரேட் பிரிட்டனுக்கு எதிராக 2-0 என வெற்றி பெற்றது.

    இந்தோனேசியா, சீன தைஃபே, இந்திய ஜோடிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்றிருந்தனர். ஆனால் இந்தோனேசியா ஜோடி 140 பாயிண்ட்கள் வெற்றி பெற்றிருந்தது. 108 பாயிண்ட்களை (140-108= 32) இழந்திருந்தது.

    சீன தைஃபே 161 பாயிண்ட்கள் பெற்றிருந்தது. 151 பாயிண்ட்கள் (161-151= 10) இழந்திருந்தது. இந்திய ஜோடி 131 பாயிண்ட்கள் வெற்றி பெற்றிருந்தது. 140 பாயிண்ட்களை இழந்திருந்தது (131-140= -9). இதனால் பாயிண்ட்கள் அடிப்படையில் இந்தோனேசியா, சீன தைஃபோ ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேறின. இந்திய ஜோடி காலிறுதி வாய்ப்பை இழந்தது.
    Next Story
    ×