search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்
    X
    புரோ கபடி லீக்

    புரோ கபடி ‘லீக்’: டெல்லி அணியின் ஆதிக்கம் நீடிக்குமா?- ஜெய்ப்பூருடன் இன்று மோதல்

    புரோ கபடி லீக்கின் 73-வது ஆட்டத்தில் டெல்லி - ஜெய்ப்பூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 7-வது கட்ட ஆட்டங்கள் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 73-வது போட்டியில் டெல்லி - ஜெய்ப்பூர் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 9 வெற்றி, 1 தோல்வி, 1 டையுடன் 48 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் ஆதிக்கம் இன்றும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ப்பூர் அணி ஏற்கனவே தோற்று இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு - பாட்னா அணிகள் மோதுகின்றன. பாட்னா அணி ஏற்கனவே பெங்களூரிடம் தோற்று இருக்கிறது. அதற்கு பழிதீர்க்கும் ஆர்வத்தில் உள்ளது. பெங்களூர் அணி 8-வது வெற்றி வேட்கையில் உள்ளது.
    Next Story
    ×