
இதில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மொயீன் அலி டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் 4 ரன்கள் சேர்த்தார். இரண்டு இன்னிங்சிலும் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். மேலும் முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி நாதன் பந்தில் ஆட்டமிழந்ததால் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகியிருக்க முடிவு செய்துள்ளார் என அவர் விளையாடும் கவுன்ட்டி அணியான வொர்செஸ்டர்ஷைர் அணி தெரிவித்துள்ளது.