search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஜ்ரங்
    X
    பஜ்ரங்

    டிபிலிசி கிராண்ட் பிரிக்ஸ் மல்யுத்தம்: பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்

    ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற மல்யுத்தம் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார். இந்த சீசனில் அவரது 4-வது தங்கம் இதுவாகும்.
    ஜார்ஜியா தலைநகர் டிபிலிசியில் டிபிலிசிஸ் கிராண்ட் பிரிக்ஸ் மல்யுத்தம் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு ப்ரீ ஸ்டைல் போட்டியில் இந்திய வீரரான பஜ்ரங் புனியா இறுதிப் போட்டியில் ஈரானைச் சேர்ந்த பெய்மேன் பிபியானியை எதிர்கொண்டார். இதில் பஜ்ராங் புனியா 2-0 என வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

    இந்த சீசனில் பஜ்ரங் வெல்லும் 4-வது தங்கம் இதுவாகும். இதற்கு முன் டான் கொலோவ், ஆசிய சாம்பியன்ஷிப், அலி அலிவ் தொடர் ஆகியவற்றில் தங்கம் வென்றிருந்தார்.
    Next Story
    ×