search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெய்ல் - விராட் கோலி
    X
    கெய்ல் - விராட் கோலி

    2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்

    இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை நடக்கிறது.
    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அமெரிக்காவில் நடந்த முதல் 2 ஆட்டத்திலும் முறையே 4 விக்கெட் மற்றும் 22 ரன்னில் வெற்றி பெற்றது. கயானாவில் நடந்த 3-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் கயானாவில் நடந்த முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை (11-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. சோனிடென் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்திய அணி வெற்றியுடன் ஒரு நாள் தொடரை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. 4-வது வீரர் வரிசையில் ஷிரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு கிடைக்கும். 5-வது வரிசையில் கேதர்ஜாதவ் ஆடுவார்.

    மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டியில் இடம் பெற்ற வீரர்களே நாளையும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்யப்பட மாட்டாது என்று தெரிகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    இரு அணியிலும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம்:-

    இந்தியா விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், ஷிரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரி‌ஷப்பந்த், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, கலீல் அகமது.

    வெஸ்ட் இண்டீஸ்: ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ்கெய்ல், லீவிஸ், ஹோப், ஹெட்மயர், பூரன், ரோஸ்டன் சேஸ், ஆலன், பிராத்வெயிட், கேமர் ரோச், கோட்ரெல்.
    Next Story
    ×