search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதமடித்த ஜெகதீசன்
    X
    சதமடித்த ஜெகதீசன்

    டிஎன்பிஎல் - ஜெகதீசன் சதத்தால் திருச்சி வாரியர்சை வீழ்த்திய திண்டுக்கல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஜெகதீசன் அபாரமாக விளையாடி சதமடிக்க, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்று நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் கேப்டன் ஆர்.அஸ்வின், திருச்சியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

    முதலில் பேட் செய்த திருச்சி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜயும், கே.முகுந்தும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கம் தந்தனர். கே.முகுந்த் 43 ரன்னில் அவுட்டானார். 

    சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முரளி விஜய் துரதிர்ஷ்டவசமாக 99 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 3 விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் நிலைத்து நின்று ஆடி மிரட்டினார். 

    கடைசி 5 ஓவரில் திண்டுக்கலின் வெற்றிக்கு 65 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரில் 27 ரன்களும், 17-வது ஓவரில் 23 ரன்களும் ஜெகதீசனும், விவேக்கும் இணைந்து திரட்டினர். இவ்விரு ஓவர்களிலும் ஜெகதீசன் 4 சிக்சர் பறக்க விட்டார். இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. விவேக் 29 ரன்னில் கிளீன் போல்டு ஆனார்.

    அபாரமாக ஆடிய ஜெகதீசன் சதம் விளாசினார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட 2-வது சதம் இதுவாகும். இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

    தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ், முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் (பிளே–ஆப்) நுழைந்தது. 

    ஆட்டநாயகன் விருது பெற்ற திண்டுக்கல் வீரர் ஜெகதீசன் இந்த தொடரில் இதுவரை ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 340 ரன்கள் குவித்து முதலிடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×