search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனியுடன் சவுரவ் கங்குலி
    X
    டோனியுடன் சவுரவ் கங்குலி

    எதிர்காலத்தில் நானும் நிச்சயம் இப்படி ஆவேன்... -சவுரவ் கங்குலி

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது என்ன? என்பதை பார்ப்போம்.
    புது டெல்லி:

    இந்திய  அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் இருந்து கவனிக்கத்தக்க அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து கொல்கத்தாவில் கங்குலி உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஐபிஎல், சிஏபி, தொலைக்காட்சி வர்ணனை என நான் மேற்கொள்ளும் பணிகளை முதலில் நிறைவு செய்கிறேன். ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் இந்திய பயி்ற்சியாளராவேன். நிச்சயமாக எனக்கு ஆர்வம் உள்ளது. எதிர்காலத்தில் ஆக வேண்டும் என்பதில் நாட்டம் உள்ளது.

    நிச்சயமாக, பயிற்சியாளராக எனக்கும் ஆர்வமுள்ளது. இருப்பினும் இந்த காலக்கட்டத்தில் இல்லை. இன்னும் ஒரு கட்டம் போகட்டும் அப்போது பயிற்சியாளர் களத்தில் என்னுடைய பெயரையும் இடம்பெற செய்வேன். இப்போது பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டுள்ளேன்.

    சவுரவ் கங்குலி

    இப்போது தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களில் பெரிய பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. இப்போதைய தேர்வுக்கு ஜெயவர்தனே  விண்ணப்பிப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அவர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.

    தேர்வுக்குழு என்ன முடிவெடுக்கும் என்று எனக்கு தெரியவில்லை. சாஸ்திரி பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? என்பது பற்றி என் கருத்தை நான் இப்போதைக்கு நிறுத்தி வைக்கிறேன். அதுகுறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.

    பயிற்சியாளரை தீர்மானிக்கும் அமைப்பு முறையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறேன். இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவாகவே உள்ளது.  இந்தியாவிற்கு சவாலான அளவிலே போட்டிகள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×