என் மலர்

  செய்திகள்

  ஒல்லி ஸ்டோன் போல்டாகிய காட்சி
  X
  ஒல்லி ஸ்டோன் போல்டாகிய காட்சி

  உலகக்கோப்பை சாம்பியனை 85 ரன்னில் சுருட்டிய அயர்லாந்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயர்லாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து 23.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 85 ரன்னில் சுருண்டு படுமோசமான நிகழ்வை சந்தித்துள்ளது.
  இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

  கத்துக்குட்டி அணியான அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் ரன்குவிக்கும் நோக்கத்தோடு களம் இறங்கினர். அவர்கள் நினைப்பை அடியோடு குழிதோண்டி புதைத்தனர் அயர்லாந்து பந்து வீச்சாளர்கள்.

  ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராய் 5 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 6 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

  5 விக்கெட் வீழ்த்திய அயர்லாந்து வீரர் முர்டாக்

  3-வது வீரராக களம் இறங்கிய டென்லி ஓரவிற்கு தாக்குப்பிடிக்க, ஜோ ரூட் (2), பேர்ஸ்டோவ் (0), மொயீன் அலி (0), கிறிஸ் வோக்ஸ் (0) அடுத்தடுத்து நடையை கட்டடினர். இதனால் இங்கிலாந்து 43 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

  டென்லி 23 ரன்களும், சாம் குர்ரான் 18 ரன்களும், ஸ்டோன் 19 ரன்களும் அடிக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 23.4 ஓவரிலேயே 85 ரன்னில் சுருண்டது. மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னைக் கடந்தனர்.

  ஸ்கோர் போர்டு

  அயர்லாந்து அணி சார்பில் முர்டாக் 5 விக்கெட்டும், அடைர் 3 விக்கெட்டும், ரங்கின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் அயர்லாந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
  Next Story
  ×