என் மலர்

  செய்திகள்

  காரைக்குடி காளை அணி
  X
  காரைக்குடி காளை அணி

  சூப்பர் ஓவரில் வெற்றியை ருசித்தது காரைக்குடி காளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிஎன்பிஎல் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காரைக்குடி அணி வெற்றி பெற்றது.
  தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில்  காரைக்குடி காளைஸ் அணியை திருச்சி ஏதிர் கொண்டது. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

  கேப்டன் ஸ்ரீகாந்தின் அதிரடி ஆட்டத்தால் காரைக்குடி காளை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

  இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.

  திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அரவிந்த், விஜய் களமிறங்கினர். அரவிந்த் 13, ஆதித்யா 16 ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினர். இதனையடுத்து விஜய் உடன் ராகவ் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். ராகுல் 22 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் விஜய் அரை சதம் அடித்தார்.

  விஜய் 81 ரன், கணபதி 21 ரன்கள் எடுத்து வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 6 பந்துளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்கள் எடுத்தது திருச்சி அணி. இதனால் சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது.

  இந்நிலையில் திருச்சி அணி முதலில் பேட் செய்தது. 1 ஓவரில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் எடுத்தது.

  12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணி களமிறங்கியது. 2 பந்துகள் மீதம் உள்ள நிலையில் காரைக்குடி அணி வெற்றியை ருசித்தது.
  Next Story
  ×