என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடியோ: என் வழி தனி வழி.. பாட்டில் மூடி சேலஞ்சை தன் ஸ்டைலில் செய்த யுவராஜ் சிங்
Byமாலை மலர்9 July 2019 4:17 AM GMT (Updated: 9 July 2019 4:17 AM GMT)
சமூக வலைத்தளங்களில் தற்போது பாட்டில் கேப் சேலஞ்ச் வைரலாக பரவி வருகிறது. இந்த சவாலை இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தன் ஸ்டைலில் செய்து காட்டியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமாகி விட்டது.
டென் (10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச், வாக்குவம் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
அந்த வரிசையில் தற்போது ‘பாட்டில் கேப் சேலஞ்ச்’ பிரபலமாகி வருகிறது. பாட்டில் ஒன்று முன் இருக்க, ‘கிக்’ மூலம் அந்த மூடியைக் கழற்ற வேண்டும் இதுதான் சேலஞ்ச்.
ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கோலிவுட் நடிகர் அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இதை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
என் வழி தனி வழி.. பாட்டில் மூடி சேலஞ்சை தன் ஸ்டைலில் செய்த யுவராஜ் சிங்#YuvrajSinghpic.twitter.com/lf0uBicZOi
— Maalai Malar News (@maalaimalar) July 9, 2019
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், தனக்கான தனி வழியில், தனக்கே உரித்தான ஸ்டைலில் இந்த சேலஞ்சினை செய்து முடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாட்டில் ஒன்று யுவராஜின் எதிரே உள்ளது. அதன் மூடியினை சரியாக குறிப்பார்த்து யுவராஜ் பேட்டிங் செய்கிறார். அவருக்கு போடப்பட்ட பந்து சரியாக பாட்டிலின் மூடி மீதுப்பட்டு ஓபன் ஆகிவிடுகிறது. இவரது ஸ்டைல் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் பல்வேறு தரப்பினரும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் யுவராஜை கமெண்ட்டுகளில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Next Story
×