என் மலர்

  செய்திகள்

  ஜெர்மனி சியர்ஸ் ஃபார் இந்தியா டுவிட்டரை கலக்கும் ஜெர்மனியின் நட்சத்திர கால்பந்து வீரர்
  X

  'ஜெர்மனி சியர்ஸ் ஃபார் இந்தியா' டுவிட்டரை கலக்கும் ஜெர்மனியின் நட்சத்திர கால்பந்து வீரர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெர்மன் கால்பந்து வீரர் தாமஸ் முல்லேர் டுவிட்டர் பதிவின் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்புச் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். இது இப்போது இணையத்தை கலக்கி வருகிறது.
  உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி நாளை சவுடாம்தனில் நடக்க உள்ள போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இதற்காக இந்தியா- தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றன.

  இந்நிலையில் இந்திய அணியின் முதல் ஆட்டத்தை காண இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் தாமஸ் முல்லேர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணி மற்றும் விராட் கோலிக்கு சிறப்புச் செய்தியை பதிவிட்டுள்ளார்.  அது மட்டுமின்றி, தாமஸ் இந்திய அணியின் உடை அணிந்து கையில் பேட்டுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். மேலும் 'ஜெர்மனி சியர்ஸ் ஃபார் இந்தியா' எனும் ஹேஷ்டாக்கினை போட்டு குறிப்பிட்டிருப்பதாவது:

  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் களமிறங்கி திரிலாக விளையாடப்போகும் அனைத்து அணிகளுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனது ஆதரவு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கே.

  மேலும் கோலி, ஜெர்மன் கால்பந்து கூட்டமைப்பின் ரசிகராவார். முந்தைய ஆட்டங்களில் ஜெர்மனி கால்பந்து அணிக்கு அவரது ஆதரவை முழுவதுமாக வழங்கியுள்ளார். 

  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  

   

   
  Next Story
  ×