search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் கிரிக்கெட்: ஸ்காட்லாந்துக்கு எதிராக 24 ரன்னில் சுருண்டது ஓமன்
    X

    ஒருநாள் கிரிக்கெட்: ஸ்காட்லாந்துக்கு எதிராக 24 ரன்னில் சுருண்டது ஓமன்

    ஸ்காட்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணி 17.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 24 ரன்னில் சுருண்டது. #SCOTvOMAN
    ஓமன் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அல் அமராத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி ஓமன் அணி முதலில் களம் இறங்கியது. ஸ்காட்லாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 24 ரன்னில் சுருண்டது. 3-வது வீரர் கவர் அலி மட்டும் தாக்குப்பிடித்து 15 ரன்கள் அடித்தார். ஐந்து வீரர்கள் ரன்ஏதும் எடுக்கவில்லை.

    ஸ்காட்லாந்து அணி சார்பில் ஸ்மித், நெய்ல் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். பின்னர் 25 ரன்கள் அடித்தால் வெறறி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஸ்காட்லாந்து 3.2 ஓவரில் 26 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    Next Story
    ×