search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்ட்னர்ஷிப்பில் அதிக சதம் : 3-வது இடத்தில் ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி
    X

    பார்ட்னர்ஷிப்பில் அதிக சதம் : 3-வது இடத்தில் ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி

    ஒருநாள் போட்டியில் அதிக சதம் கண்ட ஜோடியில் ரோகித் சர்மா - விராட் கோலி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். #RohitSharma #ViratKohli
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 243 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 62 ரன்னிலும், விராட் கோலி 60 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்தனர். இது இருவருடைய பார்ட்னர்ஷிப்பில் அடித்த 16-வது சதமாகும். இதன்மூலம் பார்ட்னர்ஷிப்பில் அதிக சதம் அடித்த ஜோடியில் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.



    சச்சின் தெண்டுல்கர் - சவுரவ் கங்குலி ஜோடி 26 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. தில்சன் - குமார் சங்ககரா ஜோடி 20 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. கில்கிறிஸ்ட் - ஹெய்டன் ஜோடி 16 சதங்கள் அடித்து ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடியுடன் 3-வது இடத்தை பகிர்ந்துள்ளது.
    Next Story
    ×