search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறைந்த டெஸ்டில் 200 விக்கெட், 3 ஆயிரம் ரன்: இயன் போத்தம் சாதனையை முறியடித்தார் சாகிப் அல் ஹசன்
    X

    குறைந்த டெஸ்டில் 200 விக்கெட், 3 ஆயிரம் ரன்: இயன் போத்தம் சாதனையை முறியடித்தார் சாகிப் அல் ஹசன்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான போட்டியில் 200 விக்கெட், 3 ஆயிரம் ரன்கள் சேர்த்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #BANvWI
    வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் வங்காளதேச கேப்டன் சாகிப் அல் ஹசன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    இதன்மூலம் டெஸ்டில் அவர் 200 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவர் ஏற்கனவே 3 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தார். குறைந்த டெஸ்டில் 200 விக்கெட் கைப்பற்றி, 3 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை சாகிப் அல் ஹசன் எட்டினார்.

    இதன்மூலம் போத்தம் சாதனையை முறியடித்தார். இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் போத்தம் 55 டெஸ்டில் இதனை கடந்து இருந்தார். 31 வயதான சாகிப் அல் ஹசன் டெஸ்டில் 3727 ரன் எடுத்துள்ளார். 201 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
    Next Story
    ×