search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாடுகளில் டிராவிட் செய்த சாதனைகளை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்தட்டுமா? - கவாஸ்கர்
    X

    வெளிநாடுகளில் டிராவிட் செய்த சாதனைகளை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்தட்டுமா? - கவாஸ்கர்

    கடந்த 15-20 ஆண்டுகளில் இருந்த அணியை விட தற்போதைய இந்திய அணி தான் சிறந்த அணி என கூறிய ரவி சாஸ்திரிக்கு வெளிநாடுகளில் டிராவிட் செய்த சாதனைகளை ஞாபகப்படுத்தட்டுமா என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். #RaviShastri #SunilGavaskar #RahulDravid
    புதுடெல்லி :

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது, ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற  நான்காவது போட்டியில் வெற்றிக்கு மிக அருகாமையில் சென்று பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் தோல்வியை பரிசாக பெற்றது.

    இந்த தொடரில் கேப்டன்  விராட் கோலியை தவிற மற்றவர்கள் சிறப்பாக விளையாடவில்லை, புஜாரா மற்றும் ரகானே மட்டும் ஒரு சில இன்னிங்ஸ்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் மற்ற வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    மேலும், கோலியின் கேப்டன்ஷிப் மற்றும் ரவி சாஸ்திரி குறித்தும் சமூக வளைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஷேவாக், முன்னாள் கேப்டன் கங்குலி ஆகியோர் ரவிசாஸ்திரியை நேரிடையாகவே விமர்சனம் செய்தனர்.

    இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைவுக்கு ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய்பாங்கர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று கங்குலி சாடி இருந்தார்.

    இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக ரவிசாஸ்திரி கூறுகையில், ‘ நம் வீரர்கள் முடிந்த அளவிற்கு போராடியும் இங்கிலாந்து அணி ஒருபடி மேல் இருந்து வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 9 போட்டிகள் உள்பட 3  தொடர்களை வென்றுள்ளோம்.

    குறிப்பாக சொல்லப்போனால் கடந்த 15-20 ஆண்டுகளில் இருந்த இந்திய அணியை விட இப்போது உள்ள அணி தான் சிறந்த அணி, முந்தைய அணிகளில் சிறந்த வீரர்கள் இருந்தும் குறுகிய காலத்தில் இதுபோன்று ரன்களை அடித்தது இல்லை’ என விமர்சனங்களுக்கு பதிலளித்தும் முன்னாள் வீரர்களை வெறுப்பேற்றும் விதமாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், வெளிநாட்டு மண்ணில் ராகுல் டிராவிட் செய்த சாதனைகளை ஞாபகப்படுத்தட்டுமா? என ரவி சாஸ்திரிக்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.



    இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    1993-ம் ஆண்டுக்கு பிறகு 2015-ம் ஆண்டு வரை பல ஆண்டுகளாக இலங்கையில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றவில்லை, ஆனால் அந்த காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தொடரை இந்தியா கைப்பற்றியது.

    நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் 80-களின்  இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்தில் தொடரை வென்றுள்ளது. கடைசியாக இங்கிலாந்து தொடரை கடந்த 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியா கைப்பற்றியது. அதே டிராவிட் தலைமையில் 2005-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா, வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

    இந்த தொடர் வெற்றிகளுக்கு ஒரு கேப்டனாக டிராவிடின் பங்களிப்பு குறைவு என்றாலும், வெளிநாடுகளில் தொடரை வெல்லும் வலிமையுடைய வீரர்கள் அப்போதைய அணியில் இருந்தனர். இதை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #RaviShastri #SunilGavaskar #RahulDravid
    Next Story
    ×