search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எனது மகள் டென்னிஸ் விளையாட மாட்டாள்- செரீனா நம்பிக்கை
    X

    எனது மகள் டென்னிஸ் விளையாட மாட்டாள்- செரீனா நம்பிக்கை

    எனது மகள் டென்னிஸ் விளையாட மாட்டாள் என்று பெண் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #serena
    டென்னிஸ் விளையாட்டில் பெண் சிங்கமாக வளம் வந்தவர் செரீனா வில்லியம்ஸ். இவர் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனைகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். இன்னும் ஒரு பதக்கம் வென்றால் உலகளவில் அதிக பட்டங்கள் வென்ற ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட் சாதனையை சமன் செய்வார்.

    கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபனில் பதக்கம் வென்ற பின்னர், கர்ப்பிணியாக இருந்ததால் டென்னிஸில் இருந்து ஒதுங்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா எனப் பெயரிட்டுள்ளார்.

    தற்போது மீண்டும் செரீனா டென்னிஸ் களத்திற்கு திரும்பியுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். விம்பிள்டன் தொடருக்கான தரநிலையில் முதல் 10 இடத்தில் இருந்த வீராங்கனைகள் தோல்வியடைந்து வெளியேறிவிட்டார்கள். இதனால் செரீனாவிற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.



    டென்னிஸில் அரங்கில் அசைக்க முடியாத மங்கையாக விளங்கி வரும் செரீனாவிடம் உங்கள் மகள் டென்னிஸ் போட்டியில் உங்களை பின்தொடர்ந்தால் நீங்கள் அதை விரும்புவீர்களா? என்று கேட்டனர். அதற்கு செரீனா, ‘‘இல்லை, எனது மகள் டென்னிஸ் விளையாடமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால், ஐஸ் கேட்டிங் வேடிக்கையாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×