என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்கள் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்- இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
Byமாலை மலர்22 March 2018 11:03 AM GMT (Updated: 22 March 2018 11:03 AM GMT)
இந்தியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #INDWvAUSW
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. போட்டியை நடத்தும் இந்தியா தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதல் பேட்டிங் செய்தது. அனுபவ வீராங்கனை மிதலி ராஜ் 18 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மந்தனா சிறப்பாக விளையாடி 41 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 67 ரன்கள் குவித்தார். அதன்பின் 6-வது வீரராக களம் இறங்கிய அனுஜா பட்டீல் 21 பந்தில் 35 ரன்கள் சேர்க்க இந்திய வீராங்கனைகள் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை மூனே 45 ரன்களும், 4-வது வீரராங்கனை வில்லானி 39 ரன்களும் சேர்த்தனர்.
கேப்டன் லேனிங் அவுட்டாகாமல் 25 பந்தில் 35 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை நடக்கும் 2-வது அட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. #SportNews

Next Story
×