என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிகுவா- பார்புடா, கயானா, செயின்ட் லூசியாவில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்
Byமாலை மலர்23 Jan 2018 10:06 AM GMT (Updated: 23 Jan 2018 10:06 AM GMT)
வெஸ்ட் இண்டீஸ் ஆண்டிகுவா - பார்புடா, கயானா, செயினிட் லூசியாவில் பெண்கள் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது. #ICCWT20WC #WT20WC
இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு ஐசிசியின் பெண்கள் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸில் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை நடைபெறும் என ஐசிசி அறிவித்தது.
அதன்படி இந்த வருடம் நவம்பர் 9-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸில் பெண்கள் உலகக்கோப்பை நடைபெற இருக்கிறது. எந்தெந்த மைதானங்களில் ஆட்டம் நடைபெறும் என்பதை ஐசிசி இன்று தெரிவித்துள்ளது. ஆண்டிகுவா- பார்புடா, கயானா, செயின்ட் லூசியா ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க சுற்று ஆட்டங்கள் கயானா தேசிய மைதானம், செயின்ட் லூசியானாவில் உள்ள டேரன் சமி மைதானத்தில் நடக்கிறது. ஆண்டிகுவா - பார்புடா சர் விவியன் ரிச்சட்ர்ஸ் மைதானத்தில் இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் 2007-ம் ஆண்டு ஆண்களுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரையும், 2010-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரையும் நடத்தியுள்ளது. #ICCWT20WC #WT20WC

Next Story
×