என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மராட்டிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் யுகி பாம்ப்ரி - திவிஜ் ஷரன் ஜோடி தோல்வி
Byமாலை மலர்6 Jan 2018 5:02 AM IST (Updated: 6 Jan 2018 5:02 AM IST)
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இரட்டையர் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, திவிஜ் ஷரன் ஜோடி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. #YukiBhambri #DivijSharan #Maharastraopen
புனே:
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி - திவிஜ் ஷரன் ஜோடி, பிரான்சின் பைரீ-ஹியூஸ் ஹெர்பர்ட் - கில்லிஸ் சைமன் ஜோடியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை பிரான்ஸ் ஜோடி 6-4 என கைப்பற்றியது. அடுத்த சுற்றில் இந்திய ஜோடி அதிரடியாக விளையாடியது. இருப்பினும் பிரான்ஸ் ஜோடி இந்த செட்டையும் 7-6 என கைப்பற்றியது. இதன்மூலம் 6-4, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பைரீ-ஹியூஸ் ஹெர்பர்ட் - கில்லிஸ் சைமன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பிரான்ஸ் ஜோடி, நெதர்லாந்தின் ரோபின் ஹாஸ் - மாட்வே மிடெல்கூப் ஜோடியை எதிர்கொள்கிறது.
ஒற்றையர் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மற்றும் முதல் நிலை வீரரான மரின் சிலிச் (குரோஷியா), கில்லிஸ் சைமன் (பிரான்ஸ்) உடன் மோதினார். இதில் 1-6, 6-3, 6-2 என்ற செட்களில் வெற்றி பெற்ற சைமன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முன்னாள் சாம்பியன் சிலிச் தொடரைவிட்டு வெளியேறினார்.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரரான தென்னாப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் - பிரான்சின் பெனாய்ட் பைரீயை எதிர்கொண்டார். இதில் 6-7, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் கெவின் ஆண்டர்சன் வெற்றி பெற்றார்.
இன்று நடைபெறும் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கெவின் ஆண்டர்சன் மற்றும் கில்லிஸ் சைமன் பலப்பரீட்சை செய்ய உள்ளனர். #YukiBhambri #DivijSharan #Maharastraopen

Next Story
×