search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு: வின்ஸ், கேரி பேலன்ஸ் சேர்ப்பு
    X

    ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு: வின்ஸ், கேரி பேலன்ஸ் சேர்ப்பு

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கேரி பேலன்ஸ் இடம்பிடித்துள்ளனர்.
    டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் ஆஷஸ் தொடர் மிகவும் பிரபலமானது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடர் வருகிற நவம்பர் 23-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு 7-ந்தேதி வரை நடக்கிறது.

    இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போது ஒரு நபரை தாக்கிய வழக்கில் சிக்கியுள்ள பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கையில் சிறிய அளவில் காயம் ஏற்பட்ட நிலையிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறாத ஜேம்ஸ் வின்ஸ், கேரி பேலன்ஸ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். வெஸ்லே நீக்கப்பட்டுள்ளார்.


    மாற்று விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ்

    ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள 16 பேர் கொண்ட வீரர்கள் விவரம்:-

    1. ஜோ ரூட் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. ஜேம்ஸ் ஆண்டர்சன், 4. பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), 5. ஜேக் பால், 6. கேரி பேலன்ஸ், 7. ஸ்டூவர்ட் பிராட், 8. அலஸ்டைர் குக், 9. மசன் கிரேன், 10. பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), 11. தாவித் மாலன், 12. கிரேக் ஓவர்டன், 13. பென் ஸ்டோக்ஸ், 14. மார்க் ஸ்டோன்மேன், 15. ஜேம்ஸ் வின்ஸ், 16. கிறிஸ் வோக்ஸ்.
    Next Story
    ×