என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: மெஹ்முதுல்லா, மொமினுல் ஹாக் நீக்கம்
Byமாலை மலர்19 Aug 2017 2:42 PM GMT (Updated: 19 Aug 2017 2:42 PM GMT)
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்காள தேச அணியில் இருந்து மெஹ்முதுல்லா, மொமினுல் ஹாக் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்காள தேச மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 27-ந்தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் அடுத்த மாதம் 4-ந்தேதியும் தொடங்குகிறது.
இதற்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர் நசிர் ஹொசைனுக்கு இடம் கிடைத்துள்ளது. அவர் கடைசியாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விளையாடியவர். தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அணியில் இடம் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளரான ஷபியுல் இஸ்லாம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடியிருந்தார். தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.
சமீபத்தில் வங்காள தேசம் இலங்கை சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது முதல் டெஸ்டிற்குப் பிறகு மெஹ்முதுல்லா மற்றும் மொமினுல் ஹாக் ஆகியோர் நீக்கப்பட்டனர். தற்போது அவர்கள் இருவரும் அணியில் இடம் பெறவில்லை.
மொமினுல் ஹாக் கடந்த 2013-ல் இருந்து தொடர்ச்சியாக வங்காள தேச அணியில் இடம்பிடித்தவர். தற்போதுதான் முதன்முறையாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொடருக்குப்பின் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்து அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றவர் மெஹ்முதுல்லா. இருந்தாலும் டெஸ்ட் அணியில் அவரால் இடம்பிடிக்க முடியவில்லை.
ஆஸ்திரேலியா தொடருக்கான வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. முஷ்பிகுர் ரஹிம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), 2. தமிம் இக்பால், 3. இம்ருல் கெய்ஸ், 4. லித்தோன் தாஸ், 5. சவுமியா சர்கர், 6. ஷாகிப் அல் ஹசன், 7. சபீர் ரஹ்மான், 8. முஸ்டாபிஜூர் ரஹ்மான், 9. மெஹெதி ஹசன், 10. தஸ்கின் அஹமது, 11. மொகடெட் ஹொசைன், 12. நசிர் ஹொசைன், 13. ஷபியுல் இஸ்லாம், 14 தைஜுல் இஸ்லாம்.

Next Story
×