search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாரியப்பன் பயிற்சியாளருக்கு துரோணாச்சார்யா விருது இல்லை: மத்திய அரசு அறிவிப்பு
    X

    மாரியப்பன் பயிற்சியாளருக்கு துரோணாச்சார்யா விருது இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

    பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவின் பயிற்சியாளர் சத்யநாராயணாவிற்கு துரோணாச்சார்யா விருது இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
    தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் தங்க பதக்கம் வென்றார். அவருக்கு பயிற்சியாளராக இருந்தவர் சத்யநாராயணா.

    சமீபத்தில் மாரியப்பன் பெயர் அர்ஜூனா விருதுக்கும், சத்யநாராயணா பெயர் துரோணாச்சாரியார் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

    இந்த பரிந்துரைகளில் இடம் பிடித்துள்ளவர்கள் மீது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்தது. அப்போது சத்யநாராயணா மீது கிரிமினல் வழக்கு ஒன்று இதுவரை முடிவடையாமல் இருப்பது தெரிய வந்தது.



    இதனால் அவருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படமாட்டாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மற்ற விருதுகளுக்கான பரிந்துரையில் இடம்பிடித்துள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பெயரை ஏற்றுக் கொண்டுள்ளது. டென்னிஸ் வீரர் போபண்ணா பெயர் அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பெயர் இடம்பெறவில்லை.
    Next Story
    ×