search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாலே ஓபன் டென்னிஸ்: 11-வது முறையாக பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    X

    ஹாலே ஓபன் டென்னிஸ்: 11-வது முறையாக பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ரஷிய வீரரை வீழ்த்தி 11-வது முறையாக பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
    ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், ரஷியாவின் கரேன் காசனவ்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டை பெடரர் 6-4 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் ரஷிய வீரர் சற்று நெருக்கடி கொடுத்தார். இதனால் அந்த செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இருந்தாலும் பெடரர் 7-6(5) என 2-வது செட்டை கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    இந்த வெற்றியின் மூலம் பெடரர் 11-வது முறையாக ஹாலே ஓபன் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதுவரை 8 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளார்.
    Next Story
    ×