என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10 விக்கெட்டுக்களை கைப்பற்றி பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் சாதனை
Byமாலை மலர்24 Jun 2017 12:44 PM GMT (Updated: 24 Jun 2017 12:44 PM GMT)
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற 3-வது டிவிசன் லீக் போட்டியில் வருண் சோரகம்வி 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 3-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பாகல்கோட்டில் நடைபெற்ற போட்டியில் லாய்ட் பவுண்டடேசன் - குலெடாகுட்டா அணியும் மோதின.
முதலில் குலேடாகுட்டா பேட்டிங் செய்தது. லாய்டு பவுண்டேசன் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் சோரகம்-வியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் குலெடாகுட்டா அணி பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.
அவர் விக்கெட்மேல் விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இறுதியில் ஒட்டுமொத்தமாக 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். இவர் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதால் குலெடாகுட்டா அணி 15 ஓவரில் 70 ரன்கள் சுருண்டது. வருண் 36 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.
பின்னர், லாய்டு பவுண்டேசன் அணி களம் இறங்கியது. வருண் சோரகம்வி 20 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 58 ரன்கள் சேர்க்க லாய்டு பவுண்டேசன் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பந்து வீச்சில் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வருண், பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதற்கு முன் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லேகர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளே 1999-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
அதன்பின் தற்போது வருண் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

Next Story
×