search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்.: மும்பை வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
    X

    ஐ.பி.எல்.: மும்பை வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    சாஹா, மெக்ஸ்வெல் அதிரடியால் மும்பை அணியின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
    மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி மார்ட்டின் கப்தில், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கப்தில் 18 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அசுர வேகத்தில் ரன் குவித்தார். அவர் 21 பந்தில் இரண்டு பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 47 ரன்கள் சேர்த்தார். இதனால் பஞ்சாப் அணியின் ரன்ரேட் 10-ஐ தாண்டிச் சென்றது.



    ஒருபுறம் முக்கியமான இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சகா தொடர்ந்து அதிரடி காட்டினார். அவருக்குத் துணையாக ஷேன் மார்ஷ் 16 பந்தில் 25 ரன்களும், அக்சார் பட்டேல் அவுட்டாகாமல் 13 பந்தில் 19 ரன்களும் சேர்த்தனர்.  சகா 55 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 93 ரன்கள் குவித்து ஆட்மிழக்காமல் குவிக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பில் மெக்கிளெனகன் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

    பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ன இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×