search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MIvKXIP"

    ஐ.பி.எல். போட்டியில், மும்பை அணியிடம் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின், மீண்டும் ஒருமுறை தான் சிறந்த பவுலர் என்பதை பும்ரா நிரூபித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். #IPL2018
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பை 3 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது.

    முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன் எடுத்தது. அடுத்த விளையாடிய பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 183 ரன் எடுத்தது. இந்த வெற்றி மூலம் மும்பை பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

    7-வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணிக்கு பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த அணி ரன் ரேட்டில் (-0.490) மோசமாக இருக்கிறது.

    தனது கடைசி லீக் ஆட்டத்தில் (சென்னைக்கு எதிராக) நல்ல ரன் ரேட்டுடன் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். மும்பைக்கு எதிரான தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-


    இலக்கை சேசிங் செய்த போது பேட்டிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் சரியாக செயல்படவில்லை. மும்பை வீரர் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். மீண்டும் ஒரு முறை தான் சிறந்த பவுலர் என்பதை நிரூபித்துள்ளார். கடந்த போட்டியில் (பெங்களூருக்கு எதிராக) நாங்கள் மிகவும் மோசமாக விளையாடினோம்.

    அது பற்றி எங்கள் பேட்ஸ்மேன்களிடம் ஆலோசித்தோம். லோகேஷ் ராகுல், ஆரோன் பிஞ்ச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி கட்டத்தில் ராகுல் அவுட் ஆன விதம் சரியா, தவறா  என்று கூறுவது மிகவும் கடினம். அந்த பந்தை அவர் தவறாக அடித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-


    முக்கியமான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. எதை எதிர்பார்த்தேனோ அதை வீரர்கள் செய்து முடித்தார்கள். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது என்பதிலும், அதிகமான ஸ்கோர் குவிக்க முடியும் என்பதும் தெரியும்.

    நாங்கள் மிடில் ஓவரில் தடுமாறிவிட்டோம். பொல்லார்ட் எப்போதுமே எங்கள் அணியின் மேட்ச் வின்னர் தான். கடந்த சில ஆட்டங்களில் அவரை நீக்கிவிட்டு விளையாடினோம். அது எப்பேதும் கடினமான முடிவு தான். 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படாததற்காக அவர் வருத்தப்பட்டார்.

    கடைசி கட்ட ஓவர்களில் டுமினி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் பொல்லார்டுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்தேன். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் எப்போதுமே நன்றாக ஆடக்கூடியவர். அதை அவர் சரியாகவே செய்தார். பும்ரா கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக பந்துவீசி வருகிறார். பொறுப்பை எடுத்துக்கொண்டு அவர் அபாரமாக வீசினார்.

    இவ்வாறு அவர் கூறினார். #IPL2018 #MIvKXIP #Ashwin
    வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். #IPL2018 #MIvKXIP
    ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் நிதானமாக விளையாட சூர்யகுமார் யாதவ் அதிரடியில் இறங்கினார். மும்பை இந்தியன்ஸ் 3.1 ஓவரில் 37 ரன்கள் எடுத்திருக்கும்போது லெவிஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 12 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷான் ஆட்டமிழந்த அடுத்த பந்தில் சூர்யகுமார் யாதவ் 15 பந்தில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அன்ட்ரிவ் டை வீழ்த்தினார்.

    அதன்பின் வந்த ரோகித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 8.2 ஓவரில் 71 ரன்கள் எடுப்பதற்குள் முதல் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு குருணால் பாண்டியா உடன் கீரன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது.

    12-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். இந்த ஓவரில் குருணால் பாண்டியா இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். 14-வது ஓவரை ராஜ்பூட் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார் பொல்லார்டு. இந்த இரண்டு ஓவரில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 37 ரன்கள் கிடைத்தது.

    15-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் குருணால் பாண்டியா ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஹர்திக் பாண்டியா களம் இறங்கினார். விக்கெட் இழந்ததை பற்றி கவலைப்படாமல் 4-வது மற்றும் ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் பொல்லார்டு. அதோடு விடாமல் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி 22 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 17 ரன்கள் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது.

    16-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் மும்பை இந்தியன்ஸ்க்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 3-வது பந்தை லாங்-ஆஃப் திசையை நோக்கி தூக்கினார். ஆனால் பந்து சிக்சருக்கு செல்லாமல் பிஞ்ச் கையில் தஞ்சமடைந்தது. பொல்லார்டு 23 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் சேர்த்தார்.



    7-வது விக்கெட்டுக்கு ஹர்திப் பாண்டியா உடன் பென் கட்டிங் ஜோடி சேர்ந்தார். 16-வது மற்றும் 17-வது ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தலா மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் வேகத்தில் தடை ஏற்பட்டது. அஸ்வின் வீசிய 18-வது ஓவரின் 4-வது பந்தில் பென் கட்டிங் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வேகப்பந்து வீச்சாளர் மெக்கிளேனகன் களம் இறங்கினார். கடைசி பந்தை மெக்கிளேனகன் சிக்ஸ் தூக்க அஸ்வின் இந்த ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    19-வது ஓவரை அன்ட்ரிவ் டை வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். டை 4 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். மும்பை இந்தியன்ஸ் 19 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். முதல் பந்தில் மார்கண்டே பவுண்டரி அடித்தார். அதன்பின் பவுண்டரி ஏதும் செல்லாததால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
    ×