என் மலர்

  செய்திகள்

  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
  X

  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். #IPL2018 #MIvKXIP
  ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

  அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் நிதானமாக விளையாட சூர்யகுமார் யாதவ் அதிரடியில் இறங்கினார். மும்பை இந்தியன்ஸ் 3.1 ஓவரில் 37 ரன்கள் எடுத்திருக்கும்போது லெவிஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

  அடுத்து வந்த இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 12 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷான் ஆட்டமிழந்த அடுத்த பந்தில் சூர்யகுமார் யாதவ் 15 பந்தில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அன்ட்ரிவ் டை வீழ்த்தினார்.

  அதன்பின் வந்த ரோகித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 8.2 ஓவரில் 71 ரன்கள் எடுப்பதற்குள் முதல் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு குருணால் பாண்டியா உடன் கீரன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது.

  12-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். இந்த ஓவரில் குருணால் பாண்டியா இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். 14-வது ஓவரை ராஜ்பூட் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார் பொல்லார்டு. இந்த இரண்டு ஓவரில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 37 ரன்கள் கிடைத்தது.

  15-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் குருணால் பாண்டியா ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஹர்திக் பாண்டியா களம் இறங்கினார். விக்கெட் இழந்ததை பற்றி கவலைப்படாமல் 4-வது மற்றும் ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் பொல்லார்டு. அதோடு விடாமல் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி 22 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 17 ரன்கள் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது.

  16-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் மும்பை இந்தியன்ஸ்க்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 3-வது பந்தை லாங்-ஆஃப் திசையை நோக்கி தூக்கினார். ஆனால் பந்து சிக்சருக்கு செல்லாமல் பிஞ்ச் கையில் தஞ்சமடைந்தது. பொல்லார்டு 23 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் சேர்த்தார்.  7-வது விக்கெட்டுக்கு ஹர்திப் பாண்டியா உடன் பென் கட்டிங் ஜோடி சேர்ந்தார். 16-வது மற்றும் 17-வது ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தலா மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் வேகத்தில் தடை ஏற்பட்டது. அஸ்வின் வீசிய 18-வது ஓவரின் 4-வது பந்தில் பென் கட்டிங் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வேகப்பந்து வீச்சாளர் மெக்கிளேனகன் களம் இறங்கினார். கடைசி பந்தை மெக்கிளேனகன் சிக்ஸ் தூக்க அஸ்வின் இந்த ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

  19-வது ஓவரை அன்ட்ரிவ் டை வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். டை 4 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். மும்பை இந்தியன்ஸ் 19 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்தது.

  கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். முதல் பந்தில் மார்கண்டே பவுண்டரி அடித்தார். அதன்பின் பவுண்டரி ஏதும் செல்லாததால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
  Next Story
  ×