என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல்: புனே அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி அதிரடி நீக்கம்
Byமாலை மலர்19 Feb 2017 8:17 AM GMT (Updated: 19 Feb 2017 8:17 AM GMT)
ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரில் விளையாட சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணிக்காக விளையாடி வந்த வீரர்கள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள புனே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
சென்னை அணியின் கேப்டன் தோனியை, புனே அணி 12.5 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. அதன்படி சென்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணியின் கேப்டனாக தோனி செயல்பாட்டார். ஆனால் தோனி தலைமையிலான புனே அணி மோசமாக தோல்வியடைந்தது.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் வருகின்ற தொடரில் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனே அணி 7-வது இடத்துக்கு பின் தங்கியதால் தோனி நீக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் வருகின்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான அணி 14 போட்டிகளில் விளையாடி 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×