என் மலர்

  செய்திகள்

  வயது வெறும் நம்பர் மட்டும்தான்: 38 வயதை நெருங்கும் நெஹ்ரா கூறுகிறார்
  X

  வயது வெறும் நம்பர் மட்டும்தான்: 38 வயதை நெருங்கும் நெஹ்ரா கூறுகிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வயது என்பது வெறும் நம்பர் மட்டும்தான், திறமையை பெற ஒரு போட்டி போதுமானது என்று 38 வயதாக இருக்கும் நெஹ்ரா கூறியுள்ளார்.
  கான்பூரில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, நெஹ்ரா மற்றும் பும்ப்ரா ஆகியோரின் அபார பந்து வீச்சுதான் முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ராய் மற்றும் பில்லிங்ஸ் ஆகியோரை ஒரே ஒவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார் நெஹ்ரா. இதனால் இங்கிலாந்து அணியின் அதிரடி கட்டுப்படுத்தப்பட்டது. இந்த போட்டியில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

  37 வயது 276 நாட்கள் ஆகும் அசிஷ் நெஹ்ரா அணியில் இடம்பிடித்துள்ளது குறித்து சில விமர்சனங்கள் எழுகின்றன. குறிப்பாக அவர் பீல்டிங் சரியாக செய்வதில்லை. உடற்தகுதியில் பிரச்சினை உள்ளது. 38 வயதாக இருக்கும் அவருக்கு அணியில் இடம்கொடுக்க வேண்டுமா? என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

  இந்நிலையில் நேற்றைய போட்டிக்குப்பின் வயது என்பது வெறும் நம்பர் மட்டும்தான், பழைய நிலைமைக்கு திரும்ப ஒரு போட்டி போதுமானது என்று தெரிவித்துள்ளார்.

  மேலும் இதுகுறிதது நெஹ்ரா கூறுகையில் ‘‘50 ஓவர் போட்டியில் அல்லது 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறேன். என்றாலும், நான் ஒரு ஸ்டம்பை வைத்து வலைப்பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது, போட்டிக்கான குறைந்த பயிற்சி ஆட்டம் குறித்து ஒருபோதும் நினைத்தது கிடையாது. இதனால் எனது பழைய நிலையை அடைய ஒரு போட்டி மட்டுமே போதுமானதாகும்.

  நான் வருகின்ற மாதத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறேன். அதன்பின் இரண்டு மாதம் ஐ.பி.எல். தொடரில் விளையாட இருக்கிறேன். பேட்ஸ்மேனாக இருந்தாலும், பந்து வீச்சாளர்களாக இருந்தாலும் நீண்ட நாட்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால் பயிற்சி ஆட்டம் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நானும் டோனியும் தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்று நினைக்கிறார்கள். நாங்கள் உள்ளூர் போட்டியில் விளையாடுகிறோம். அனுபவம் உண்மையிலேயே முக்கியமான விஷயம்.

  இந்தியாவில் வயதை கணக்கில் எடுத்துக்கொள்வது துரதிருஷ்டவசமானது. நீங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ரசிகர்கள் உங்களை வாழ்த்துவார்கள். அணி இரண்டு மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து விட்டால், ரசிகர்கள் ஒட்டுமொத்த 15 பேரையும் விமர்சனம் செய்ய மாட்டார்கள். ஆனால், ஆசிஷ் நெஹ்ராவை நீக்கியிருக்க வேண்டும் என்று சொல்வார்கள். வயது ஏறிக்கொண்டே இருப்பதால், அது எந்தவித மாற்றத்தையம் உருவாக்காது. வயது ஒரு நம்பர் மட்டும்தான்.

  நான் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்பதால் உடற்தகுதியை சீராக வைத்திருப்பது கடினம் என்பது எனக்குத் தெரியும். நான் போட்டியின் முடிவிலும் தொடக்கத்திலும் பந்து வீசுகிறேன். என்னுடைய உடல் ஒத்துழைக்கும் வரை நான் எனது போட்டியை மகிழ்ச்சியாக எடுத்துகொண்டு வருகிறேன். இதே அளவில் தொடர்ந்து விளையாட முயற்சி செய்து வருகிறேன்.

  நான் கடந்த 7 முதல் 8 மாதங்கள் விளையாடவில்லை. இருந்தாலும் குறைவான பயிற்சி ஆட்டங்கள் என்று எப்போதுமே நினைத்தது கிடையாது. போட்டிக்கு வரும்போதும், போட்டியை முடிக்கும்போதும் சிறந்த உற்சாகத்துடன் இருக்க வேண்டும். நான் ஒருபோதும் சோர்வாக உணர்ந்தது கிடையாது’’ என்றார்.
  Next Story
  ×