search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகா: கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது பார்சிலோனா
    X

    லா லிகா: கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது பார்சிலோனா

    லா லிகா தொடரில் ரியல் பெடிஸ் அணிக்கெதிரான போட்டியில் 90-வது நிமிடத்தில் சுவாரஸ் அடித்த கோலால் பார்சிலோனா போராடி டிரா செய்தது.
    லா லிகா கால்பந்து தொடரில் இன்றைய லீக் போட்டி ஒன்றில் பார்சிலோனா - ரியல் பெடிஸ் அணிகள் மோதின. ரியல் பெடிஸ் அணியை ஏற்கனவே பாரசிலோனா 6-2 என வீழ்த்தியிருந்தது. இதனால் இன்றைய போட்டியிலும் பார்சிலோனா எளிதாக வெற்றி பெறும் என்று எதர்பார்க்கப்பட்டது.

    அதேநேரத்தில் புள்ளிகள் அட்டவணையில் ரியல் மாட்ரிட் 43 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. செவில்லா 42 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. பார்சிலோனா 41 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 44 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து விடலாம் என்பதால் பார்சிலோனா அணிக்கு இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

    ஆனால் ரியல் பெடிஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்ள பார்சிலோனா அணிக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் ரியல் பெடிஸ் அணியின் அலெக்ஸ் அலெக்ரியா கோல் அடித்து அசத்தினார். கார்னரில் இருந்து அடித்த பந்தை ரியான் டங்க் தலையால் முட்டி அலெக்ஸ் அலெக்ரியாவிற்கு பாஸ் செய்தார். அதை கோலாக மாற்றினார் அலெக்ஸ். இதனால் பார்சிலோனாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது.

    ஆட்டத்தின் கடைசி நிமிடமான 90-வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த பந்தை சுவாரஸ் கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 1-1 சமநிலைப் பெற்றது. பின்னர் கூடுதல் நேரம் 4 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    சுவாரசின் கடைசி நேர கோலால் பார்சிலோனா தோல்வியில் இருந்து தப்பியது. இந்த போட்டி டிரா ஆனதால் புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 42 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×