என் மலர்

  செய்திகள்

  சரியான நேரத்தில் ராஜினாமா முடிவு: டோனிக்கு தேர்வுக்குழு தலைவர் சல்யூட்
  X

  சரியான நேரத்தில் ராஜினாமா முடிவு: டோனிக்கு தேர்வுக்குழு தலைவர் சல்யூட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சரியான நேரத்தில் தனது ராஜினாமா முடிவை மகேந்திர சிங் டோனி எடுத்துள்ளார். அதற்கு எனது சல்யூட் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
  இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி கேப்டன் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

  அவரது முடிவுக்கு தலை வணங்குகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார்.

  டோனியின் ஓய்வு குறித்து எம்.எஸ்.கே. பிரசாத் கூறுகையில் ‘‘டோனி இந்த முடிவை ஒரு வருடத்திற்கு முன் அல்லது 6 மாதங்களுக்கு முன் எடுத்திருந்தால், நான் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்திருப்பேன். சரியான நேரத்தில் தனது உணர்வை வெளிப்படுத்திய அவருக் சல்யூட் அடிக்கிறேன்.

  டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபாரமாக செயல்பட்டு வருகிறார் என்று அவருக்குத் தெரியும். ஆகையால் டோனி சரியான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு இந்திய கிரிக்கெட் மீது அதிக ஆர்வும் வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது.

  விக்கெட் கீப்பராக இன்னும் சில வருடங்கள் அவர் அணியில் நீடித்து, அணிக்கு தனது பங்களிப்பை அளிக்க முடியும். கேப்டனாக அவர் எல்லா சாதனைகளையும் படைத்துவி்ட்டார. டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளார். 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஐ.பி.எல். கோப்பை, சாம்பியன்ஸ் லீக் என அனைத்தையும் பெற்றுவிட்டார். இதற்கு மேல் சாதனைப் படைக்க ஒன்றுமில்லை’’ என்றார்.
  Next Story
  ×