என் மலர்

  செய்திகள்

  ரஞ்சி டிராபி கிரிக்கெட்: அரை இறுதியில் மும்பை அணி ஐதராபாத்தை வீழ்த்தியது
  X

  ரஞ்சி டிராபி கிரிக்கெட்: அரை இறுதியில் மும்பை அணி ஐதராபாத்தை வீழ்த்தியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணி 30 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
  ராய்ப்பூர்:

  மும்பை முதல் இன்னிங்சில் 294 ரன்னும், ஐதராபாத் முதல் இன்னிங்சில் 280 ரன்னும் எடுத்தன. மும்பை 2-வது இன்னிங்சில் 217 ரன்னில் சுருண்டது. இதனால் ஐதராபாத்துக்கு 217 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

  அந்த அணி 71 ஓவர்களில் 201 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. அனிருத் அதிகபட்சமாக 84 ரன் எடுத்தார். அபிஷேக்நாயர், கோகில் தலா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். தமிழ்நாடு, ஜார்க்கண்ட் அணிகள் ஏற்கனவே அரை இறுதிக்கு நுழைந்து விட்டன.

  குஜராத்-ஒடிசா இடையேயான கால்இறுதி ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் அரைஇறுதியில் நுழைய அதிகமான வாய்ப்பு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் தொடக்க வீரர் சமீத் கோகல் முச்சதம் அடித்தார்.

  ஜனவரி 1-ந்தேதி ராஜ் காட்டில் நடைபெறும் முதல் அரைஇறுதியில் தமிழ்நாடு- மும்பை அணிகள் மோதுகின்றன. நாக்பூரில் 3-ந் தேதி தொடங்கும் 2-வது அரைஇறுதியில் ஜார்க்கண்ட்- குஜராத் அணிகள் மோதுகின்றன.

  Next Story
  ×