என் மலர்

  செய்திகள்

  வெளிநாட்டில் இந்தியா வெற்றி பெறும்: வீராட்கோலிக்கு ஷேவாக் பாராட்டு
  X

  வெளிநாட்டில் இந்தியா வெற்றி பெறும்: வீராட்கோலிக்கு ஷேவாக் பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கங்குலி தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டில் பெற்ற வெற்றியை போல் வீராட் கோலியும் வெற்றியை பெற்று தருவார் என ஷேவாக் கூறியுள்ளார்.

  புதுடெல்லி, டிச. 3-

  இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக் புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கூறியதாவது:-

  வீராட்கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. இதனால் கஙகுலி தலைமையிலான இந்திய அணி 2000-2004-ம் ஆண்டுகளில் வெளிநாட்டில் பெற்ற வெற்றியை போல் வீராட் கோலியும் வெற்றியை பெற்று தருவார்.

  இந்த அணி வெளிநாட்டு மண்ணில் வெல்லும் ஆற்றலும், தகுதியும் உள்ள அணி என நம்பகிறேன். அங்கு விக்கெட்டுகளை கைப்பற்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் வேண்டும். நம்மிடம் முகமது சமி, உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் உள்ளனர். இவர்களால் வெற்றி பெற்று தர முடியும்.

  இளம் வீரர் ரிஷாப் பாண்ட்டுக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது. அவர் நிச்சயமாக இந்திய அணியில் விளையாடுவார். அவர் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் பாண்ட் இந்திய அணியில் இடம் பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×