என் மலர்

  செய்திகள்

  4 நாடுகள் ஆக்கி: இந்திய அணிக்கு முதல் வெற்றி
  X

  4 நாடுகள் ஆக்கி: இந்திய அணிக்கு முதல் வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  4 நாடுகள் ஆக்கி போட்டியில் இந்திய அணி 4-2 கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது.
  மெல்போர்ன் :

  இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய 4 நாடுகள் இடையிலான ஆக்கி போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது.

  இந்திய தரப்பில் நிகின் திம்மையா 21-வது மற்றும் 55-வது நிமிடத்திலும், ரூபிந்தர்பால்சிங் 40-வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப்சிங் 56-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த தொடரில் இந்திய அணி பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும். இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது.

  அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி நாளை நியூசிலாந்தை சந்திக்கிறது.
  Next Story
  ×