search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பி.சி.சி.ஐ.-யின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
    X

    பி.சி.சி.ஐ.-யின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

    லோதா கமிட்டி பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பி.சி.சி.ஐ. மறு சீராய்வு மனு செய்தது. இந்த முனுவை கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
    பி.சி.சி.ஐ.-யில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து லோதா கமிட்டி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தயாரித்து தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் செய்யப்பட்டிருந்த பரிந்துரைகளில் 90 சதவீதம் கருத்துக்களை பி.சி.சி.ஐ. ஏற்றுக்கொண்டது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பி.சி.சி.ஐ.-க்கு கோர்ட்டு கேட்டுக்கொண்டது. இதில் பெரும்பாலானா பரிந்துரைகளை பி.சி.சி.ஐ. ஏற்க மறுத்தது. ஆனால், உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி லோதா கமிட்டியின் பரிந்துரைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த பிரச்சினை இன்னும் நீடித்துக்கொண்டே வந்த நிலையில் லோதா பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பி.சி.சி.ஐ. சீராய்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லோதா பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த சீராய்வு மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.

    இதனால் பி.சி.சி.ஐ. லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டிய கட்டயாத்தில் உள்ளது. ஆனால், பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் லோதா கமிட்டி பரிந்துரைக்கு எதிராக இருப்பதால் பி.சி.சி.ஐ. இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருக்கிறது.
    Next Story
    ×