என் மலர்

  செய்திகள்

  நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு- தவான், லோகேஷ் ராகுல் நீக்கம்
  X

  நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு- தவான், லோகேஷ் ராகுல் நீக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
  இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் இந்தூரில் 8-ந்தேதி தொடங்குகிறது.

  அதனைத்தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 16-ந்தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந்தேதி டெல்லியிலும், 3-வது போட்டி சண்டிகரில் 23-ந்தேதியும் நடக்கிறது.

  இந்த மூன்று போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. காயத்தால் அவதிப்படும் தவான், லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டுள்ளனர்.

  நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. டோனி (கேப்டன்), 2. ரோகித் சர்மா, 3. விராட் கோலி, 4. ரகானே, 5. மணீஷ் பாண்டே, 6. ரெய்னா, 7. ஹர்திக் பாண்டியா, 8. அக்சார் பட்டேல், 9. ஜெயந்த் யாதவ், 10. மிஸ்ரா, 11. பும்ப்ரா, 12. தவால் குல்கர்னி, 13. உமேஷ் யாதவ், 14. மந்தீப் சிங், 15. கேதர் ஜாதவ்.
  Next Story
  ×