search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்-வாவ்ரிங்கா இறுதிப்போட்டிக்கு தகுதி
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்-வாவ்ரிங்கா இறுதிப்போட்டிக்கு தகுதி

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜோகோவிச், உலகின் 3-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டி களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடை பெற்று வருகிறது.

    இந்திய நேரப்படி நள்ளிரவு நடந்த ஒரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா), 10-வது வரிசையில் இருக்கும் பிரான்சின் மான்பில்சை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 32 நிமிட நேரம் தேவைப்பட்டது. ஜோகோவிச் கடந்த 12 ஆண்டுகளில் 7-வது முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் ரோஜர் பெடரர், ஜிம்மி கார்னருடன் இணைந்தார்.

    2-வது அரை இறுதி ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து)- 6-வது வரிசையில் இருக்கும் நிஷிகோரி (ஜப்பான்) மோதினார்கள்.

    இதில் வாவ்ரிங்கா முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தார். அதன் பின்னர் அவர் சுதாரித்து விளையாடி அடுத்தடுத்து 3 செட்களை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஸ்டார் 4-6, 7-5, 6-4, 6-2 அவர் முதல் முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியிலல் ஜோகோவிச்- வாவ்ரிங்கா மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் உலகின் 2-ம் நிலை வீராங்கனை கெர்பர் (ஜெர்மனி)- 10-வது வரிசையில் இருக்கும் கரோலினா பிலிஸ்கோவா (செக்குடியரசு) மோது கிறார்கள்.

    கெர்பர் 2-வது கிராண்ட்சிலாம் பட்டம் பெறும் ஆர்வத்துடனும், கரோலினா முதல் கிராண்ட் சிலாம் பட்டம் பெறும் வேட்கையிலும் உள்ளனர்.
    Next Story
    ×