என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மினி ஏலத்தில் மொத்தம் 1,355 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
    • 1,062 இந்திய வீரர்கள் மற்றும் 293 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த ஏலத்தில் மொத்தம் 1,355 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி 1,062 இந்திய வீரர்கள் மற்றும் 293 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதனை ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    வீரர்களுக்கான அடிப்படை விலை குறைந்தபட்சம் ரூ. 30 லட்சம் என்றும் அதிகபட்சம் ரூ. 2 கோடி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் ஆடிய திறமையான வீரர்கள் பலரும் ரூ.2 கோடி என்ற அடிப்படை விலையில் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் ஆரம்ப விலை ரூ.2 கோடியிலிருந்தே தொடங்கும்.

    இந்நிலையில் இந்த மினி ஏலத்தில் அதிகபட்ச தொடக்க விலையான ரூ.2 கோடிக்கு வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னாய் ஆகிய இரு இந்திய வீரர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மொத்தம் 45 வீரர்கள் இப்பிரிவில் தங்களது பெயர்களை பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் 2026 ஏலத்தில் ரூ.2 கோடி அடிப்படை விலை வீரர்கள்:

    ரவி பிஷ்னோய், வெங்கடேஷ் ஐயர், முஜீப் ரஹ்மான், நவீன் உல் ஹக், அபோட், அகர், கோனோலி, ஃப்ரேசர்-மெக்குர்க், கிரீன், இங்கிலிஸ், ஸ்மித், முஸ்தாபிஸூர், அட்கின்சன், பான்டன், கர்ரன், டாசன், டக்கெட், லாரன்ஸ், லிவிங்ஸ்டன், டைமல், ஜேமி ஸ்மித், ஆலன், பிரேஸ்வெல், கான்வே, டப்பி, ஹென்றி, ஜேமிசன், மில்னே, டாரில் மிட்செல், ஓ'ரூர்க், ரச்சின் ரவீந்திரா, கோட்ஸி, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, நார்ட்ஜே, ரூசோவ், ஷம்சி, வைஸ், ஹசரங்கா, பத்திரனா, தீக்ஷனா, ஹோல்டர், சாய் ஹோப், ஹொசைன் மற்றும் அல்ஸாரி.

    • மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை.

    சென்னை:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் உங்களை மிஸ் செய்யப் போகிறேன் என கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடிய இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். அதில் உங்களை மிஸ் செய்யப் போகிறேன் maxi bro. மகிழ்ச்சி, குறும்புத்தனம், கேலி பேச்சு... நீங்கள் இல்லாமல் டிரெஸிங் ரூம் முன்பு போல் நிச்சயம் இருக்காது என கூறியுள்ளார்.

    • இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
    • இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் நாளை நடக்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ராய்பூருக்கு சென்றனர்.

    இந்நிலையில் நாளை நடக்கும் 2-வது ஒருநாள் போட்டியின் போது டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ஜெர்சி போல பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சையத் முஷ்டாக் அலி தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் பரோடா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
    • இதில் பரோடா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சையத் முஷ்டாக் அலி தொடர் இந்தியாவில் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் பரோடா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பரோடா அணி 19.1 ஓவரில் 224 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் பரோடா அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது களத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ஹர்திக் பாண்ட்யாவுடன் செல்பி எடுத்தக் கொண்டார். இதனையடுத்து அந்த ரசிகரை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினர். செல்பி எடுத்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் துள்ளி குதித்துக் கொண்டு வெளியேறினார். அவர் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் நாளை நடக்கிறது.
    • இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி ராய்பூர் சென்றடைந்தது.

    டெஸ்ட் தொடரை தொடந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் நாளை நடக்க உள்ளது.

    இதற்காக இந்திய அணி வீரர்கள் ராய்பூருக்கு சென்றனர். இந்நிலையில் அங்கு இந்திய வீரர் விராட் கோலியை குழந்தைகள் பூ கொடுத்து வரவேற்றனர். அவர்களின் அன்பு பரிசை ஏற்ற விராட் கோலி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து விடை பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி 177 ரன்கள் எடுத்தது.
    • இதனையடுத்து விளையாடிய மகாராஷ்டிரா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பீகார் - மகாராஷ்டிரா (குரூப் பி) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணியின் கேப்டன் பிரித்வி ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. சூர்யவன்ஷி 108 ரன்களுடனும், ஆயுஷ் லோஹருகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மகாராஷ்டிரா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரித்வி ஷா அதிரடியாக ஆடி அணிக்கு வலு சேர்த்தார். வெறும் 30 பந்துகளில் 66 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    பின்னர் வந்த வீரர்களில் நிரஜ் ஜோஷி 30 ரன்கள், ரஞ்சித் நிகாம் 27 ரன்கள், நிகில் நாய்க் 22 ரன்கள் ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் மகாராஷ்டிரா அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் அடித்த 3 விக்கெட்டுள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரித்வி ஷா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    முன்னதாக இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் புதிய சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். அதன்படி சையது முஸ்தாக் அலி கோப்பை தொடரில் இளம் வயதில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். வைபவ் 61 பந்துகளில் 108 ரன்களை விளாசினார். 14 ஆண்டுகள் 250 நாட்களில் வைபவ் சதம் அடித்து இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

    • ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 4-ந் தேதி தொடங்குகிறது.
    • முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறாது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 21-ந் தேதி தொடங்கி 2 நாட்களே முடிவுக்கு வந்தது.

    இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

    இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக வரும் 4-ந் தேதி பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதன்படி முதல் போட்டியில் விளையாடிய மார்க் வுட் காயம் காரணமாக விலகி நிலையில் அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் வில் ஜக் அணியில் இடம் பிடித்துள்ளார். வேறு எந்த மாற்றமும் செய்யபடவில்லை.

    இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:-

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (வாரம்), வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்

    • ஜூனியர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் 2 முறை சாம்பியனான இந்திய அணி (2001, 2016) ‘பி’ பிரிவில் உள்ளது.
    • இந்த போட்டியிலும் வென்று ஹாட்ரிக்குடன் இந்தியா கால் இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. வருகிற 10-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் 2 முறை சாம்பியனான இந்திய அணி (2001, 2016) 'பி' பிரிவில் உள்ளது.

    ரோகித் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சிலியை 7-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 2-வது போட்டியில் 17-0 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தியது. 2 ஆட்டத்திலும் சேர்த்து 24 கோல்களை அடித்துள்ளது. ஒரு கோல் கூட வாங்கவில்லை.

    இந்திய அணி கடைசி லீக் போட்டியில் சுவிட்சர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    இந்த போட்டியிலும் வென்று ஹாட்ரிக்குடன் கால் இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. டிரா செய்தாலே தகுதி பெற்று விடும். ஏனென்றால் 19 கோல்கள் வித்தியாசத்தில் இருக்கிறது. இந்திய வீரர் தில்ராஜ் சிங் 6 கோல்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். சுவிட்சர்லாந்து அணியும் ஓமன் (4-0), சிலியை ( 3-2) தோற்கடித்து இருந்தது.

    • டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார் மெஸ்சி
    • அரசு பள்ளி மாணவர்களுடன் மெஸ்சி கால்பந்து விளையாடவுள்ளார்.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாகத் திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    இதற்கிடையே, மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையிலான காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இந்நிலையில், இந்த மாதம் மெஸ்சி ஐதராபாத் வருகிறார் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், லியோனல் மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடுகிறார். மெஸ்சியை வரவேற்க தெலுங்கானா தயாராக உள்ளது என தெரிவித்தார்..

    இந்நிலையில் மெஸ்சி உடன் 'Friendly Match' விளையாடுவதற்காக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இரவுநேரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    • ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.
    • மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    இந்த மினி ஏலத்தில் 10 அணிகள் சேர்ந்து 77 பேரை ஏலத்தில் எடுக்கலாம். அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், சென்னை அணியிடம் ரூ.43.40 கோடி பணமும் உள்ளது.

    இந்த நிலையில், ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஆண்ட்ரே ரசல், மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்தில் இல்லாததால் மேகரூன் கிரீனுக்கு பல அணிகள் போட்டி போட வாய்ப்பு உள்ளது.

    ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.
    • ரோகித் மற்றும் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வதந்தி பரவியது.

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.

    டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, பிசிசிஐ தரப்பிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வதந்தி பரவியது.

    இந்நிலையில் நேற்றைய போட்டியின் போதே அந்த வதந்தி முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவேன் என விராட் கோலி கூறியுள்ளார்.

    சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றியுடன் கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • 2-வது ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    வருகிற 10-ந் தேதி வரை இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்று உள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.

    4-வது நாளான இன்று பிற்பகலில் மதுரையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள ஜெர்மனி-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றியுடன் கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-0 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் கனடாவை 7-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. அயர்லாந்து முதல் ஆட்டத்தில் கனடாவை (4-3) வென்றது. அடுத்து தென் ஆப்பிரிக்காவிடம் (1-2) தோற்றது.

    2-வது ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.

    சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டிகளில் 'சி' பிரிவில் உள்ள நியூசிலாந்து-ஜப்பான் (மாலை 5.45 மணி), அர்ஜென்டினா-சீனா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.

    அர்ஜென்டினா, நியூசிலாந்து, அணிகள் 1 வெற்றி, 1 டிராவுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. ஜப்பான் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 3 புள்ளி பெற்றுள்ளது. சீனா 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

    இந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்து கால் இறுதியில் நுழைய அர்ஜென்டினா, நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடைசி ஆட் டத்திலும் வெற்றி பெறும் போது இரு அணிகளும் தலா 7 புள்ளிகளை பெறும் கோல்கள் அடிப்படையில் முடிவு நிர்ணயம் செய்யப் படும். 

    ×