என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  உலக இயக்கத்திற்கு உதவும் நாடு!- 14
  X

  உலகை வலம் வருவோம்- ச.நாகராஜன்
  உலக இயக்கத்திற்கு உதவும் நாடு!- 14

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் துபாயில் பார்த்து மகிழப் பல்வேறு இடங்கள் உள்ளன.
  • எமிரேட் அராப்துபாயின் தலைநகரமாகத் திகழும் துபாய் மத்திய கிழக்கில் உள்ளது.

  இன்று உலகில் எத்தனை வாகனங்கள் உள்ளன தெரியுமா? 132 கோடி கார்கள், லாரிகள், பஸ்கள் உள்ளன.

  விமானப் பயணம் என்று எடுத்துக் கொண்டாலோ உலகில் ஒரு நாளைக்கு 60 லட்சம் பேர் விமானம் மூலம் பயணிக்கின்றனர். புகைவண்டியில் மட்டும் உலகெங்கும் ஒரு நாளைக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சம்!

  பெட்ரோல், டீசல், ஒய்ட்பெட்ரோல் இல்லையெனில் என்ன ஆகும்? ஒரே ஒரு கணம் யோசித்துப் பார்ப்போம்! கார், லாரி, பஸ், ரயில், விமானம் எதுவும் இயங்காது. அலுவலகம் செல்ல முடியாது, நினைத்த ஊருக்குப் போக முடியாது, நாடு விட்டு நாடு போக முடியாது. உலகம் ஸ்தம்பித்து விடும்!

  இது தான் இன்றைய நிலைமை. ஆக உலக இயக்கத்திற்குத் தேவை இந்த படிம எரிபொருள்களே! இவற்றைக் கொடுத்து உலக இயக்கத்திற்கு உதவும் நாடு தான் துபாய்!

  எண்ணெய் வளம் மிகுந்த துபாய்உலகின் மூன்றாவது பெரும் பணக்கார நாடு! இன்னும் சுமார் 299 ஆண்டுகளுக்கு இது எண்ணெய் வளத்தை கொண்டிருக்கும். அதாவது 30 மில்லியன் பேரல்எண்ணெயை இது உலகிற்குத் தரவல்லது!

  இன்று 12 லட்சம் எலக்ட்ரிக்வாகனங்களே உள்ளன. ஆக வரும் காலத்திலும் படிம எரிபொருள் உலகிற்கு போக்குவரத்திற்கு உதவும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.

  எமிரேட் அராப்துபாயின் தலைநகரமாகத் திகழும் துபாய் மத்திய கிழக்கில் உள்ளது.13.5 சதுர மைல்பரப்பைக் கொண்ட இதன் மக்கள் தொகை 34.9 லட்சம். 1971ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அபுதாபி மற்றும் இதர ஐந்து எமிரேட்சுடன் இணைந்து துபாய் யுனைடெட்அராப்எமிரேட்ஸை உருவாக்கியது. 1973இல் பொது நாணயமாக யுனைடெட் அராப்எமிரேட்ஸ் திரம் திகழ ஆரம்பித்தது. ஒரு திரத்தின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ 21.24.

  வெறும் பாலைவனமாகத் திகழ்ந்த பூமியில் கறுப்புத் தங்கம் எனப்படும் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் துபாயின் செல்வவளமே நம்ப முடியாத அளவு சிகரத்தைத்தொட்டது. இப்போதோ ஹாங்காங், சிங்கப்பூரை ஒப்பிட்டுப் பார்க்கும் அளவு இருப்பதோடு,துபாய் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது.

  வானளாவிய கட்டிடங்கள் எழுந்து கொண்டே இருக்க கட்டிடப்பணிகளுக்காக உலகில் உள்ள கிரேன்களில் 25 சதவிகிதம் துபாயில் இருக்க ஆரம்பித்தன. இன்று சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் முக்கிய உலக நகரமாகதுபாய் அமைந்து விட்டது.

  சென்னை, டெல்லி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து சுமார் நாலரை மணி நேரத்தில் துபாயை விமானம் மூலம் அடைந்து விடலாம். துபாயின் சராசரி உஷ்ணநிலை 33 டிகிரிசெல்சியஸ்.

  துபாயின் பதிவு செய்யப்பட்ட முதல் ஆவணம் 1095ஆம் ஆண்டைச்சேர்ந்தது. அராபியபூகோள நிபுணர் அப்அப்துல்லாஅல்பக்ரி, துபாயைத் தனது பூகோளநூலில்குறிப்பிட்டுள்ளார். வெனிஷிய முத்து வியாபாரியானகாஸ்பரோபல்பிதுபாய்க்கு 1580ஆம் ஆண்டு வந்து இங்குள்ள முத்து தொழிலைப்பார்த்துத் தனது குறிப்பேட்டில்குறித்துள்ளார். என்றாலும் கூட துபாய் நகர் பற்றிய அதிகாரபூர்வமான ஆவணம் 1799-ல் இருந்தே தொடங்குகிறது.

  உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் துபாயில் பார்த்து மகிழப் பல்வேறு இடங்கள் உள்ளன.

  கலிபா கோபுரம் என்னும் பொருள் தரும் புர்ஜ்கலிபா உலகின் மிக உயரமான கட்டிடம் ஆகும். 163 மாடிகளைக்கொண்டுள்ள இதன் உயரம் 2716 அடியாகும்.கின்னஸ் ரிகார்டில் இடம் பெற்று விட்ட இந்த மாபெரும் கட்டிடம் அமெரிக்காவின் எம்பயர்ஸ்டேட்பில்டிங் போல இரு மடங்கு உயரமும் ஈபிள்டவர் போல் மூன்று மடங்கு உயரமும் கொண்டது. 26000 கண்ணாடிகள் வெளிப்புறத்தை அழகு படுத்த, 12000க்கும் மேற்பட்டோர்உலகெங்கிலும் இருந்து வந்து இதை அழகுறக் கட்டி முடித்தனர். இதைப் பார்வையிட கட்டணமும் குறிப்பிட்ட நேரமும் உண்டு. 125 மாடிகள் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். அதிவேகமாக உயர எழும்பும்லிப்டும் இங்கு அதிசயமான ஒன்று.

  வேறு எங்கும் அனுபவிக்க முடியாத பாலைவனஒட்டக சவாரி துபாயில் பிரசித்தி பெற்ற ஒன்று. காலையில் கிளம்பி மணல் குன்றுகளிடையே பயணம் செய்யலாம். பின்னர் பாலைவனத்தில் பழைய காலத்தில் பயணம் செய்தபடி ஒட்டகத்தில் சவாரி செய்து மகிழலாம். மணலில் சூரிய அஸ்தமனத்தைப்பார்ப்பது ஒரு கண் கொள்ளாக் காட்சி!

  நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட குவாட் பைக் எனப்படும்பைக்சவாரியும் இங்கு உண்டு.

  புர்ஜ்கலிபாவிற்கு அடுத்தாற் போல உள்ள துபாய் மால் உலகின் மிகப் பெரிய மால் ஆகும். பத்து லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இதில் 1200க்கும் மேற்பட்ட கடைகளும் நூற்றுக்கணக்கான உணவு விடுதிகளும் இரு பெரிய ஷாப்பிங்செண்டர்களும் உள்ளன.துபாயில் தங்கம் வாங்குவது ஒரு சுகமான அனுபவம். சொக்கத் தங்கத்தை இந்த மாலில்கோல்ட்சோக்கில் (தங்கச் சந்தை என்று பொருள்)வாங்க முடியும். அத்துடன் நீருக்கடியில் உள்ள அண்டர்வாட்டர்ஜு, அக்வேரியம் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும். இங்குள்ள ஐஸ்ரிங்,ஸ்கேட்டிங் செய்பவர்களுக்கு உரிய இடம் ஆகும். சினிமா காம்ப்ளக்சில் திரைப்படங்களையும் பார்க்க முடியும்.

  பனை மர வடிவத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட தீவு பாம்ஜுமேரா. சுமார் 326 கோடி கன அடி மணல் பெர்சியன் வளைகுடா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு பரப்பப்பட்டது. சுமார் 50 மைல் நீள கடற்கரை பகுதி உருவானது. பனை மரத்தைப் போலவே அச்சு அசலாக இந்தத் தீவு இருக்க வேண்டும் என்பதால் ஜிபிஎஸ் சாட்லைட்டுகளின் உதவி நாடப்பட்டு மணலைத்தூவும் பணி மேற்கொள்ளப்பட்டது. 12000 பனை மரங்களும் இங்கு நடப்பட்டன. இங்கு தீவுக்கு வர மானோரயில்வசதியும் உண்டு.விண்வெளியில் இருந்து பாம்ஜுமேராவைப் பார்க்க முடியும். விண்வெளி வீரரான கமாண்டர்லெராய்சியாவோ பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து 2005-ம் ஆண்டு இந்தத் தீவை படம் பிடித்து க்காண்பித்தார்.

  50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருடந்தோறும் இங்கு வருகின்றனர். இனி வரும் காலங்களில் இதை விட மூன்று மடங்கு அதிகப்பயணிகளை ஈர்க்கும் வகையில் இது நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள கடற்கரைகள் மிக ரம்யமானவை. பாதுகாப்பானவை. சுறாமீன்கள் இங்கு உண்டு, என்றாலும் மனிதர்களைத் தாக்கும் ராட்சச சுறாமீன்களாக இவை இல்லை. ஆகவே பயப்படாமல் பார்க்கலாம். நீச்சலுக்கான வசதிகளும் இந்தத்தீவில் உண்டு. இங்குள்ள கடல் நீர் சுத்தமானது என்ற பெயரைப்பெற்றுள்ளது.

  அறுபதுக்கும் மேற்பட்ட ரைடுகளும் நீர்வீழ்ச்சிகளும் கொண்ட லெகோலேண்ட் 30 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட ஒன்றாகும். இது 3 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கவரும் இடம். ஆகவே மழலைப்பட்டாளமும் சிறுவர், சிறுமியரும் குழுமும் இடமாக கலகலப்பாக எப்போதுமே திகழ்கிறது லெகோலேண்ட்.

  துபாயில் பார்க்க வேண்டிய தனித்துவம் மிக்க ஒரு காட்சி நடன நீரூற்றுக் காட்சி. செயற்கையாக அமைக்கப்பட்ட இந்த நீரூற்றில் உயரமாகவும் தாழ்ந்தும் வளைந்தும் நெளிந்தும்எழும்பும் நீரானது நடனமாடும். இந்த நடனக் காட்சி பார்ப்போரை மலைக்க வைக்கும். துபாய் மாலை ஒட்டி அமைந்துள்ள புர்ஜ் கலிபா லேக் என்னுமிடத்தில் இந்த நீரூற்று அமைந்துள்ளது. சுமார் 500 அடி உயரம் வரை நீரூற்று எழும்பிநடனமாடும். 6000க்கும் மேற்பட்ட ஒளிவிளக்குகள்இந்தப் பகுதியை அலங்கரிக்கின்றன. இசைப்பாடல்கள் ஒலிக்க அதற்கேற்ப குதூகலத்துடன் ஆடும் நீர் நடனம் அதிசயங்களுள் ஒன்று.

  துபாயின் பாரம்பரியம் மிக்க இடம் க்ரீக். வெவ்வேறு வடிவமைப்பில்காட்சி தரும் சுமார் இருபது அடி நீளமுள்ள படகுகளில் க்ரீக்நீர்நிலையில் சென்று க்ரீக்கை பார்வையிடலாம். இங்கு துபாய் அருங்காட்சியகம் உள்ளது. ஏராளமான கடைகளும் இந்தப் பகுதியில் உள்ளது.

  துபாய்க்கு வருகை புரிபவர்களும் துபாயிலேயே வசிப்பவர்களும் பெரிதும் புகழும் ஒன்று துபாய்மெட்ரோ.

  தானியங்கி சாதனங்களுடன்மிகத் திறம்பட இயங்கும் மெட்ரோ போக்குவரத்து 2009-ல் துவங்கப்பட்டது. ரெட் மற்றும் கிரீன் ஆகிய இருலைன்களில் 49 ஸ்டேஷன்களை கொண்டுள்ள மெட்ரோ போக்குவரத்து ஒரு நாளுக்கு மூன்றரை லட்சம் பயணிகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் தன் சேவையை வழங்குகிறது. இதில் பயணம் செய்வதால் ஒரு இடத்திற்கு மிக சீக்கிரத்தில் செல்ல முடிகிறது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

  ஏராளமான கடைப் பகுதிகள், பூங்காங்கள், செயற்கை நீரூற்றுகள், பாரம்பரியமான பழைய காலக் கட்டிடங்கள்ஆகியவை ஆங்காங்கே உள்ளதால் நாம் துபாயில் தங்க இருக்கும் காலத்திற்குத்தக்கபடி,அந்தந்தப் பகுதியில் கால்நடையாகச் சென்று பார்க்கலாம்.

  துபாயில் சட்ட ஒழுங்கு மிகச் சரியாகக்கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதால் துபாய் செல்வதற்கு முன்னர் அங்குள்ள அடிப்படை விதிமுறைகளை சுற்றுலா செல்வோர் தெரிந்து கொள்ளல் அவசியம்.பெண்களும் ஆண்களும் உடை அணிவதில் கவனம் செலுத்தி மற்றவர்கள் மதிக்கத்தக்க விதத்தில் கண்ணியமாக உடை அணிதல் வேண்டும். பொது இடங்களில் மது அருந்துதல், புகை பிடித்தல் கூடாது. மேலை நாடுகளில் இருப்பது போல பொது இடங்களில் முத்தமிடுதல் கண்டிப்பாகக் கூடாது. மற்றவர்களின் அனுமதியின்றியாரையும் போட்டோ எடுத்தல் கூடாது. இன்ன பிற விதிமுறைகளை அறிந்து அதற்குத்தக்க நடந்து கொள்ள வேண்டும்.

  துபாயில் பயணிகள் பயமின்றி நடமாடலாம். குற்றங்கள் மிகக் குறைவாக இருக்கும் நாடு இது. துபாயைப்பற்றி சொல்லுங்கள் என்றால் அங்கு பயணம் செய்தவர்கள் கூறுவது துபாய் "யுனிகியூ, அமேசிங்" -துபாயா, தனித்தன்மை வாய்ந்தது, பிரமிக்க வைப்பது!

  தொடர்புக்கு:-

  snagarajans@yahoo.com

  Next Story
  ×