search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நல்ல தொடுதல், தவறான தொடுதல் பற்றி மாணவிகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியை
    X

    நல்ல தொடுதல், தவறான தொடுதல் பற்றி மாணவிகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியை

    • வீடியோவில், ஆசிரியை ஒருவர் மாணவிகளுக்கு எளிமையான முறையில் தொடுதல் தொடர்பான விளக்கங்களை எடுத்து கூறுகிறார்.
    • வீடியோ சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    நல்ல தொடுதல் எது? தவறான தொடுதல் எது? என்பது குறித்து மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை பாடம் நடத்திய வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது. ரோஷன் ராய் என்பவர் வெளியிட்ட அந்த வீடியோவில், ஆசிரியை ஒருவர் மாணவிகளுக்கு எளிமையான முறையில் தொடுதல் தொடர்பான விளக்கங்களை எடுத்து கூறுகிறார்.

    தலையில் தட்டுதல், கட்டிப்பிடித்தல் மற்றும் உடல் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ காயப்படுத்தக் கூடிய அல்லது தீங்கு விளைவிக்கும் தொடுதல் குறித்து அவர் உதாரணங்களுடன் விளக்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், பள்ளிகளில் இத்தகைய கல்வி முக்கியத்துவம் ஆனது என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த ஆசிரியையை பாராட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×