search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நிபா வைரஸ்: கடந்த 2 நாட்கள் பாசிட்டிவ் இல்லை- கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி
    X

    நிபா வைரஸ்: கடந்த 2 நாட்கள் பாசிட்டிவ் இல்லை- கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி

    • புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை
    • ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உடல்நிலையில் முன்னேற்றம்

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கு 2 நபர்கள் அடுத்தடுத்து இறந்தனர். அதனைத் தொடர்ந்து முதலில் பலியான மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    நிபா வைரஸ் பாதித்து இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் என தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சேகரித்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 24 வயது மதிக்கத்தக்க சுகாதார பணியாளர், 39 வயது மதிக்கத்தக்க நபர் என மேலும் இருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இதனால் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு 6 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ப்பட்டன. தொற்று பாதித்த கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

    தொற்று பாதித்த பகுதிகளாக கண்டறியப்பட்ட ஆயன்சேரி, மருதோன்கரை, திருவள்ளூர், குட்டியாடி, கவிழும்பாறை, வில்லியப்பள்ளி, காயக்கொடி ஆகிய பஞ்சாயத்துகளில் 48 வார்டுகள், கோழிக்கோடு மாநகராட்சியில் 7 வார்டுகள், பெரோக் நகராட்சியில் 38 வார்டுகள், சங்கரோத் பஞ்சாயத்தில் 3 வார்டுகள், புறமேரி மற்றும் தண்ணீர் பந்தல் பகுதியில் தலா ஒரு வார்டு என 100-க்கும் மேற்படட்ட வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.

    நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி- கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கு இந்த வாரமும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கோழிக்கோடு மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 15-ந்தேதி 1,192 ஆக இருந்தது. அது தற்போது 1,233 ஆக அதிகரித்துள்ளது. நிபா வைரஸ் தொற்றுடன் காணப்பட்ட 23 பேர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கவலைக்கிடமாக இருந்து வந்த 9 வயது சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. இது குறித்து சுகாதாரத்துறை வீணா ஜார்ஜ் கூறியதாவது:-

    கேரளாவில் கடந்த 2 நாட்களாக புதிதாக நிபா பாதிப்பு எதுவும் இல்லை. தொற்று பாதித்து சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது. 9 வயது சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நிபா தொற்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் 36 வவ்வால்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கேரளாவில் இரண்டாவது நாளாக நிபா தொற்று புதிதாக யாருக்கும் உறுதி செய்யப்படாததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    Next Story
    ×