search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    அமெரிக்கா, சீன வெளியுறவு மந்திரிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

    • அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்ததில் மகிழ்ச்சி அளிப்பதாக ஜெய்சங்கர் கூறி உள்ளார்.
    • சீன வெளியுறவுத்துறை மந்திரி கின் காங்கையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெறும் ஜி20 வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பிளிங்கன் வந்துள்ளார். அவரை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்சர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் உக்ரைன் மோதல் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்வதற்கும் உலகளாவிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது' என தெரிவித்துள்ளார்.

    இதேபோல் ஜி20 வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தின் நடுவே சீன வெளியுறவுத்துறை மந்திரி கின் காங்கையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் அமைதி முயற்சி, அமைதிக்கான தற்போதைய சவால்களை எதிர்கொள்வது தொடர்பாக விவாதித்ததாகவும், ஜி20 நிகழ்ச்சி நிரல் பற்றி பேசியதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

    Next Story
    ×