search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மற்ற மாநிலங்களை குறை கூறுவதற்கு முன் மணிப்பூரை பாருங்கள்: ராஜ்நாத் சிங்கிற்கு ஆம் ஆத்மி பதிலடி
    X

    மற்ற மாநிலங்களை குறை கூறுவதற்கு முன் மணிப்பூரை பாருங்கள்: ராஜ்நாத் சிங்கிற்கு ஆம் ஆத்மி பதிலடி

    • முதலில் மணிப்பூர் மாநிலம் எரிவதை பாருங்கள்
    • டெல்லியில் கற்பழிப்பு, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு

    மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:-

    சட்டம் ஒழுங்கு உண்மையிலேயே பஞ்சாப் மாநிலத்தில் குறிப்பிடத்தகுந்த வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் குறித்து ராஜ்நாத் சிங் தவறான தகவலை பெற்றுள்ளார். ஆம் ஆத்மியின் பகவத் மான் ஆட்சியில் கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

    மணிப்பூர் எரிவதையும், மக்கள் வீடுகள் இல்லாமல் தவிப்பதையும், 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததையும் பார்க்கும்படி அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மற்ற மாநிலங்களை குறை கூறுவதை விட்டுவிட்டு அதற்கு முன், வன்முறைக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ளுங்கள்.

    டெல்லியில் சட்டம் ஒழுங்கு மற்றும் போலீஸ் மத்திய அரசுக்கு கீழ் உள்ளது. ஒவ்வொரு நாளும் கொலை, கற்பழிப்பு, வழிப்பறி நடைபெற்று வருகிறது. டெல்லியில் குற்றம் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு கூறினார்.

    Next Story
    ×