search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புயல் சின்னம் மையம் கொண்டுள்ள பகுதி
    X
    புயல் சின்னம் மையம் கொண்டுள்ள பகுதி

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தீவிர புயலாக மாறும்

    வானிலை மையம் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து இன்று புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டமானது, இன்று தென்கிழக்கு வங்கக் கடலில் சூறாவளி புயலாக வலுவடையும் என்றும், இன்று மாலையில் கிழக்கு மத்திய வங்கக் கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், ஒடிசாவின் கிழக்கு கரையோர பகுதி மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

    ஆந்திரா மற்றும் ஓடிசா நோக்கி புயல் நகரும் என தகவல் வெளியாகி உள்ளதால், சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    Next Story
    ×