search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நானா படோலே
    X
    நானா படோலே

    சமூக மோதலை உருவாக்கும் தலைவர்களின் கூட்டங்களுக்கு அனுமதி கூடாது: நானா படோலே

    பிரார்த்தனை செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை. மற்ற மதத்தை விமர்சிப்பவர்கள் அரசியல் அமைப்பில் நம்பிக்கை இல்லாதவர்கள் என நானா படோலே கூறி உள்ளார்.
    மும்பை :

    நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடந்த 2-ந் தேதி நடந்த குடிபட்வா பொது கூட்டத்தில் பேசும் போது, மசூதிகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என கூறினார். இதேபோல மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்றவில்லையெனில், அதன் அருகே நவநிர்மாண் சேனாவினர் ஒலிப்பெருக்கியில் அனுமன் பாடல்களை ஒலிப்பார்கள் என கூறியிருந்தார்.
     
    இதையடுத்து சில நவநிர்மாண் சேனாவினர் பொது இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அனுமன் பாடல்களை ஒலிக்க செய்த சம்பவங்கள் நடந்தது.

     இந்தநிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியதாவது:-

    சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தி விலைவாசி உயர்வு போன்ற மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் ஓரங்கட்டப்படுகின்றன. எந்த மதத்தை பின்பற்றவும் எல்லோருக்கும் உாிமையை அரசியல் சாசனம் வழங்கி உள்ளது. சமூக பிரச்சினையை ஏற்படுத்தும் தலைவர்களின் பொதுக்கூட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்க கூடாது. நான் ஒரு இந்து. தினந்தோறும் அனுமன் கீதம் பாடுகிறேன். அதற்காக எனது மதத்தை விளம்பரப்படுத்த தேவையில்லை. பிரார்த்தனை செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை. மற்ற மதத்தை விமர்சிப்பவர்கள் அரசியல் அமைப்பில் நம்பிக்கை இல்லாதவர்கள்.

     இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×