search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜிஎஸ்டி
    X
    ஜிஎஸ்டி

    புதிய உச்சம்- மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடி

    நாட்டில் இதுவரை இல்லாத அளவாக மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
    புதுடெல்லி:

    ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 95 கோடி ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 25,830 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 32,378 கோடி ஆகும். பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.39,131 கோடி உட்பட  ஐ.ஜி.எஸ்.டி. வசூல் ரூ.74,470 கோடி ஆகும். 

    பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.981 கோடி உட்பட செஸ் வரி மூலம் ரூ.9,414 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகையை விட நடப்பு ஆண்டு 15 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளது. 

    மார்ச் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இது ஜனவரி மாதம் வசூலிக்கப்பட்ட ரூ.1.41 டிரில்லியன் என்ற முந்தைய சாதனையை முறியடித்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×