என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு திறந்த வெளி வகுப்புகள் - மேற்கு வங்க மாநில கல்வித்துறை திட்டம்
Byமாலை மலர்23 Jan 2022 6:52 PM GMT (Updated: 24 Jan 2022 12:46 AM GMT)
கொரோனா கட்டுப்பாடுகளால் கல்வியை இழந்துள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு மைதானத்தில் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளதாக மேற்கு வங்க மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு திறந்தவெளி வகுப்புகளை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:
அருகில் உள்ள பள்ளி என்ற புதிய முயற்சியின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறந்த வெளியில் பாடங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். துணை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை ஒன்றிணைத்து குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி வழங்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் குழந்தைகள் நீண்ட காலமாக பாடங்களை இழந்துள்ளனர். இதனை கருத்திக் கொண்டு நாங்கள் இப்போது மைதானத்தில் திறந்த வெளி வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளோம். தொடக்கக் கல்வியைத் தவிர, சொற்பொழிவு, ஓவியம் போன்ற சிறப்பு வகுப்புகளிலும் பங்கேற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.
Next Story
×